வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்?

யானை முகத்தினை கடவுளான விநாயகரின் ஆன்மீக சக்திகளை கொண்டாடும் பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த மங்களகரமான நிகழ்வில் விநாயகரின் சிலையை பல குடும்பங்களும் தங்கள் வீட்டில் வைப்பார்கள். நம் வீட்டில் வணங்குவதற்காக வைக்கப்படும் சிலைக்கும் அலங்காரத்திற்காக வைக்கப்படும் சிலைக்கும் வேறுபாடு உள்ளது.

அதனால் தான் உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் இடத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். விநாயகர் சிலையை சரியான இடத்தில் வைத்த பிறகு. அதனை அலங்கரிக்கும் ஐடியாக்கள் பற்றி முடிவு செய்து கொள்ளுங்கள்.

விநாயகர் சதுர்த்தியன்று பலரும் விநாயகர் சிலையை ஹால் அல்லது பூஜையறையில் தான் வைப்பார்கள். இருப்பினும் சரியான வாஸ்து விதிமுறைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே விநாயகர் சிலையை எங்கே வைக்க வேண்டுமே என முடிவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைப்பதற்கு அடிப்படை வழிமுறைகள் உள்ளது.

இடது பக்கமாக பார்க்கும் தும்பிக்கை

விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் திரும்பியிருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். அதனால் விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி எப்போதும் இடது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

புறமுதுகை காட்டக் கூடாது

விநாயகரின் பின்புறம் வீட்டில் உள்ள எந்த ஒரு அறையையும் பார்த்தபடி இருக்க கூடாது. விநாயகர் என்பவர் வளமையை தரும் கடவுளாகும். ஆனால் அவரின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்

தெற்கு கூடாது

வீட்டில் தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையும் கூட தெற்கு திசையில் இருக்க கூடாது.

கழிவறை

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கி விநாயகர் சிலையை வைக்க கூடாது. கழிவறைக்கும் அதனை இணைக்கும் அறையின் பொதுவான சுவற்றில் சாய்த்து விநாயகரை வைக்காதீர்கள்.

வெள்ளி விநாயகர்

தங்கள் வீட்டில் சுத்தமான வெள்ளியில் செய்த விநாயகர் சிலையை பல குடும்பங்கள் வைக்கும். உங்கள் விநாயகர் சிலை உலோகத்தில் செய்யப்படதென்றால் அதனை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைத்திடவும்.

வடகிழக்கு

விநாயகரை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைப்பதே சரியான இடமாக இருக்கும். உங்கள் வீட்டின் வடகிழக்கு பக்கம் மேற்கூறிய விதிமுறைகளுக்கு இணங்கி இருந்தால், அங்கேயே சிலையை வைத்திடுங்கள்.

மாடிப்படிகளுக்கு அடியில்

நீங்கள் மாடிப்படி இருக்கும் வீட்டில் வசித்தால், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. அதற்கு காரணம் படியின் மேல் வீட்டில் உள்ளவர்கள் நடந்து செல்வார்கள் அல்லவா. இது கிட்டத்தட்ட விநாயகரின் தலை மேல் ஏறி நடப்பது போன்றதாகும். இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை அலங்கரிக்கும் போது இதே போல் சில எளிய விதிமுறைகள் உள்ளது.

– இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்