பிக்பாஸ் ஓவியாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுக்கும் பரிசு!

தமிழ் சினிமாவுக்கு ‘களவாணி’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்தப் படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்தாலும், தமிழ் சினிமாவில் ஓவியாவுக்கான இடம் வெற்றிடமாகத்தான் இருந்தது.

சில படங்களில் நடித்த ஓவியா தற்போது விஜய் டி.வி-யின் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருக்கிறார். இந்த வீட்டில் இருக்கும் பிரபலங்களில் ஓவியாவைதான் ஆடியன்ஸுக்குப் பிடித்திருக்கிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து ஓவியா எலிமினெட் ஆகாமல் இருக்க அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு ஓட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இவர் பேசும் வசனங்கள் செம்ம ட்ரெண்ட் ஆகிவருகின்றது. இதில் குறிப்பாக ‘நீங்க ஷட்-அப் பண்ணுங்க’ என்ற டயலாக் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் யுவன் தான் இசையமைக்கும் பலூன் படத்தில் ஷட்-அப் பண்ணுங்க என்ற பாடலை விரைவில் வெளியிடவுள்ளார்களாம். இது ஓவியாவிற்காக நாங்கள் கொடுக்கும் பரிசு என படக்குழுவே கூறியுள்ளது.