வேகமாய் பகிருங்கள் மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் இதுதான்!

வைரஸ் தாக்குதலால் ஏற்படுவது மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்
மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று வைரஸ் தாக்குதலால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். தனிநபர் சுகாதார தன்மை, உணவு, கழிவுப் பொருள்களின் பாதிப்பு இவற்றினால் குடிக்கும் நீரில் அசுத்தம் ஏற்படுகின்றது.

ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டால் குடிநீர் மாசுபட்டுள்ளது என்பதே காரணம் ஆகும். கோடையில் மஞ்சள் காமாலை அதிகம் காணப்படும். காரணம் இக்காலத்தில் நீர் மாசுபட அதிக வாய்ப்புகள் உண்டு. நீர் பற்றக்குறை என்பதால் கிடைக்கும் நீரை பயன்படுத்தும் பொழுதும், சுகாதார முறைகளை பின்பற்றாத போதும் மஞ்சள் காமாலை வாய்ப்புகள் கூடுகின்றன.

நீரினால் ஏற்படும் பாதிப்பில் மஞ்சள் காமாலை ஏ, ஈ, பிரிவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பி, சி பிரிவு பாதிப்பு வகைகள் ரத்தம் கொடுத்தல், பாதிப்பு உடையோரின் ஊசியினை பயன்படுத்துதல் போன்றவை மூலமாக ஏற்படுகின்றன. பொதுவில் குடிநீரில் குளோரின் நன்கு கலந்தே வழங்கப்படுகின்றது. ஆனால் பல இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. இதுவே பாதிப்பிற்கு முக்கிய காரணமாகின்றது. குடிநீரினை வடி கட்டி, காய்ச்சி குடிப்பது சிறந்த தீர்வு.

சுகாதாரம் மிக மிக அவசியம். வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை 6 வாரங்களுக்குள் 99 சதவீதம் தானே இறங்கும். எளிதில் செரிக்க கூடிய உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், ஓய்வு இவையே பாதிப்பு ஏற்பட்டவருக்கு அவசியம் ஆகின்றது. சிலருக்கே கூடுதல் கவனம் மருத்துவரால் தேவைப்படுகின்றது.

ஆக சுத்தமான நீர், சுகாதாரமான பழக்கங்கள் (உ.ம்) கைகளை சோப்பு கொண்டு நன்கு சுத்தம் செய்வது, சுகாதார உணவு இவைகள் கோடையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இன்றி உங்களை காக்கும்.

இது பொதுவான முக்கியமான தகவலாக மஞ்சள் காமாலையைப் பற்றி இருந்தாலும் மேலும் இந்நோயினைப் பற்றி அறிவோம்.

மஞ்சள் காமாலை கல்லீரல் பாதிப்பினை கூறுவது. சருமம், கண் விழி இவை மஞ்சள் நிறமாக இருக்கும். பித்த நீரில் பிலிரூபின் என்ற பொருள் அதிகரிப்பதால் இந்த நிற மாற்றம் ஏற்படுகின்றது. பித்தநீர் உணவு செரிமானத்திற்கு அவசியமான ஒன்று. இதன் உற்பத்தி பொதுவில் நிரந்தரமாக இருக்கும்.

பொதுவில் மூன்று வகையான மஞ்சள் காமாலை தாக்குதலை நாம் பார்க்க முடியும்.

* அதிக சிகப்பு ரத்த அணுக்கள் அழிந்து, ரத்த சோகை ஏற்பட்டு பிலிரூபின் அதிகமாக காணப்படுவது.

* பித்த நீர் வரும் பாதையில் ஏற்படும் அடைப்பால் ஏற்படுவது, பித்த நீர் குழாயில் கல் அடைப்பு.

* கல்லீரல் திசுக்கள் வைரஸ் தாக்குதல் அல்ல, சில வகை மருந்துகளின் நஞ்சினால் பாதிக்கப்படுவது. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்.

* மிக அதிக சோர்வு

* தலைவலி

* ஜுரம்

* பசியின்மை

* கடும் மலச்சிக்கல்

* வயிற்றுப் பிரட்டல்

* உடல், கண், நாக்கு இவற்றில் மஞ்சள் நிறம்

* சிறு நீரில் மஞ்சள்

ஆகியவை இருக்கும்.

சிலருக்கு கடும் உடல் அரிப்பு இருக்கும். மஞ்சள் காமாலை என்றாலே கல்லீரல் பாதிப்பு என்றுதான் பார்க்க வேண்டும். வைரஸ் பிரிவில் மட்டும் இது எளிதாய் பரவக் கூடியது. மேலும் சில வகை ரத்த சோகைகளாலும், டைபாய்ட், மலேரியா, டிபி பாதிப்புகளாலும் மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

காரணத்தை கொண்டே அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஏ, ஈ, பி, டி, சி பிரிவுகளினால் கல்லீரல் பாதிப்பு இருக்கலாம். சிலருக்கு அதிக ஆல்கஹால் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். ஆங்கில முறை மருத்துவத்தில் மஞ்சள் காமாலை ஏ, பி, சி, டி என பிரிவுபடுத்தப்படு கின்றது. ஏ, பி பிரிவு உயிர் இழப்பு வரை கொண்டு செல்லாது. சி, டி பிரிவுகளில் உயிர் அபாயம் கூட உள்ளது.

வடிகட்டி கொதித்து ஆற வைத்த நீரினை பயன்படுத்துவது மக்களை வெகுவாய் பாதுகாக்கும். மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டால் அது எந்த பிரிவு என்பதனை மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சைகள் பொதுவில் இல்லை. உணவு முறை, சில உடல் பாதுகாப்பு வழிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது அநேக நன்மைகள் பயக்கும். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை முடிந்த வரை கட்டுப்படுத்தி விடலாமே. ரத்தம் கொடுப்பவர் தன்னை முறையாய் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ரத்தம் பெறுபவரும் சுத்தமான ரத்தத்தினை பெற வேண்டும். முறையற்ற உடல் உறவுகளும் மஞ்சள் காமாலை பாதிப்பினை தரும் என்பதனை அறிய வேண்டும்.

கல்லீரல், கணையம் இவை இரண்டுமே கோடையில் வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படக் கூடியவைதான். இதனால் தான் மோர், எலுமிச்சை, இளநீர், தர்ப்பூசணி போன்ற பொருட்கள் அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்படு கின்றது. சோற்று கற்றாழை, கரிசலாங்கண்ணி இவை அனைத்து பிரிவு மருத்துவத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வறுத்த, பொரித்த, மசாலா உணவுகள், பீட்ஸா போன்ற வகை உணவுகள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். ஹெப்படைடில் ஓ,பி,சி பிரிவுகளின் அறிகுறிகள் ஒன்று போல இருக்கும். ‘ஓ’ பிரிவு திடீரென்று பாதிப்பினை ஏற்படுத்தும். தன்னால் இறங்கும். ‘பி’ ‘சி’ பிரிவில் திடீரென்று தாக்குதலை ஏற்படுத்தி இந்த வைரஸ் உடலிலேயே இருக்கும் வாய்ப்புகள் உண்டு. இது நீண்ட நாள் தொடர்ந்து கல்லீரல் பாதிப்பினை ஏற்படுத்தலாம். ‘ஏ’ ‘பி’-வுக்கு வாக்சின்கள் உண்டு. ஆனால் ‘சி’ பிரிவு காமாலை பாதிப்பு ஏற்படும் பொழுது மற்ற வகை பிரிவுகளாலும் காமாலை வாய்ப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இன்று ‘சி’ பிரிவிலும் சிகிச்சை முறையில் மருத்துவம் முன்னோர்களை ஆய்வு செய்து வருகின்றது.

ஏ’ பிரிவு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை பாதிப்பினை ஏற்படுத்தும். சுகாதார மற்ற நீர், உணவு இவையே இப்பிரிவு பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்று பார்த்தோம்.

* பாதிப்புள்ள இடங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

* பாதிக்கப்பட்ட நபருடன் உடல் உறவு கொண்டாலும் பாதிப்பு ஏற்படும்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் ‘ஏ’ வாக்கின் எடுத்துக்கொண்டே நம் நாட்டிற்கு வருவர். ஆனால் நம் நாட்டில் இந்த பாதிப்பு ஒருமுறை ஏற்பட்டால் பிறகு இதே ‘ஏ’ பிரிவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விடுவதால், வாக்கின் பழக்கத்திலேயே இல்லாமல் ஆகி விட்டது.

ஆயினும் சுகாதாரமற்ற குடிநீர் என்பது பரவலாக காணப்படுவதால் அநேகர் ‘ஏ’ பிரிவு மஞ்சள் காமாலைக்கு எளிதில் ஆளாகின்றனர். இனி வரும் காலங்களில் ‘ஏ’ பிரிவு வாக்கின் கூட அதிகமாக வலியுறுத்தப்படலாம். குழந்தைகளுக்கு இது அதிகம் வலியுறுத்தப்படுகின்றன.

* சருமம், கண் வெள்ளை, சிறுநீர் இவை மஞ்சளாக இருக்கும் பொழுது மஞ்சள் காமாலை என்கின்றோம். பிலிரூலின் என்ற பொருள் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் பொழுது இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது.

* ஏ.பி.சி.டி.இ. என இதனை 5 வகைகளாக பிரித்துள்ளனர். இதில் ஏ பிரிவு வைரஸ் அசுத்தம், அசுத்தமான நீர், உணவு மூலம் பரவுகின்றது.

* மஞ்சள் காமாலை பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம்.

* 3 பிரிவு ரத்தம் பாதிக்கப்பட்ட மனிதனின் நீர் சுரப்பிகளால் பரவுகின்றது. இது எய்ட்ஸ் போல அதே காரணங்களால் பரவுகின்றது. ஆனால் எய்ட்சை விடவும் 50-100 மடங்கு அதிகம் பாதிக்கும் வீரியம் கொண்டது.

* தாயிடம் இருந்து குழந்தைக்கு

ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்கு

* பாதிக்கப்பட்டவரின் ஊசியினை பிறருக்கு பயன்படுத்தினால்.

* ரத்தம்

* பாதுகாப்பற்ற, முறையற்ற உடல் உறவு இவைகளால் பிறருக்கு பி பிரிவு பரவுகின்றது.

தாய்ப்பால் கொடுப்பதாலோ, பாதிக்கப்பட்டவரின் கைகளை தொடுவதாலோ, இருமல், தும்மல், இவற்றின் மூலமோ இது பரவாது. இது வராது நம்மை பாதுகாத்துக் கொள்ள பி வாக்கின் அவசியம், போட்டுக்கொள்ள வேண்டும். குறைந்தது 20 வருடத்திற்கு உத்தரவாதமான பாதுகாப்பினை இது அளிக்கும். இதனை அவரவர் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

– அனைவருக்கும் பகிருங்கள்