அனைத்து விதமான நன்மைகளையும் தரும் சூரியன் மந்திரம்!

By | July 19, 2017

நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.

ஜபாகு சும சங்காஸம்

காஸ்ய பேயம் மகாத்யுதிம்

தமோரிம் சர்வ பாபக்னம்

ப்ரண தோஸ்மி திவாகரம்

பொருள்:

காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”சூட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.

– அனைவருக்கும் பகிருங்கள்