வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு அவசியம்!

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை சமைத்து படைப்பார்கள். சிலருக்கோ தங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அப்படியே தெரிந்திருந்தாலும், வருடா வருடம் அவர்களால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதற்கு தீர்வு என்ன? ஆடி மாதமே குலதெய்வ வழிபாட்டுக்கு விசேஷ தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் குல வழக்கம் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலர் கடா வெட்டி பூஜைசெய்வார்கள். அல்லது மீன், முட்டை, கருவாடு போன்றவற்றை சமைத்து படைப்பார்கள். இது அந்த குலதெய்வத்தின் ஸ்தல வரலாறு படித்தால் தெரியும்.

முன்னோர்கள் அசைவம் படைத்து வேண்டி இருந்தால் அதை பின்பற்றுவதில் தவறு இல்லை. ஒருவேலை இப்போது இருக்கும் தலைமுறை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தால் குலதெய்வத்திற்கு சைவம் படைக்கலாம்.

ஆனால் வாரா வாரம் அசைவத்தை மூக்கு பிடிக்க சாப்பிட்டு, வருடத்திற்கு ஒருமுறை உங்கள் குலவழக்கப்படி குலதெய்வத்திற்கு படையல் போடவில்லை என்றால் அது மிக பெரிய தெய்வ குற்றம். உங்கள் குலதெய்வத்தின் ஸ்தல புராணம் தெரியவில்லை என்றால், உங்கள் சொந்தத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து, பூஜை செய்யுங்கள். அதுவும் இந்த ஆடி மாதம் பூஜை செய்தால் வம்சம் செழிக்கும்….

– அனைவருக்கும் பகிருங்கள்

ஒரு பிரியாணி இலையை வைத்து மனதை ரிலாக்ஸ் செய்யலாம் வாங்க!