எந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்கலாம் ?

நாம் எல்லாம் கடவுளை தினமும் வணங்குகிறோம்.

எந்தகிழமைகளில் அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து வணங்குதல் வேண்டும்.

1.ஞாயிறு– சூரியன். ஆதித்ய ஸ்ருதயம் ஸ்லோகம் சொல்ல வேண்டும் .

2.திங்கள்– சிவன். தேவாரம்,திருவாசகம்,அபிராமி அந்தாதி போன்றவற்றை படிக்கலாம். அம்பிகையையும், சிவபெருமானையும் வணங்குதல் வேண்டும்.

3.செவ்வாய் – முருகன் ஆலயத்துக்கு சென்று 6 விளக்கு ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவர் .அன்று கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும் .

3.புதன் கிழமை பெருமாளை சேவிப்பது ,துளசி மாட பூஜை செய்வதற்கு உகந்த நாள்.  விஷ்ணுஸஹஸ்ர நாமம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் படித்தால் நன்மை கிட்டும்.

5.வியாழக் கிழமை குருவை வணங்குவது நன்று . குருவாக என்னும் மகான்கள் சாயி பாபா,ராமானுஜர் ,ராக வேந்தர்,காஞ்சி பெரியவா போன்றவர்கள் வணங்குவது நல்லது. அன்று பகவத்கீதையை படிக்க வேண்டும்.

6.வெள்ளி கிழமை மஹாலக்ஷ்மி வழிபாடு ,கோ பூஜை ,பஞ்சமுக குத்து விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வது விசேஷம். அம்பிகையின் ஆலயங்களுக்கு சென்று லக்ஷ்மிஸ்தோத்திரம், மகிசாசுரமர்தினி ஸ்தோத்திரம் படிக்கலாம் .

7.சனி கிழமை அன்று ஆஞ்சநேயர்,கருடாழ்வார் ,நந்திகேஸ்வரர்,நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் போன்ற இறைபக்தியில் மூழ்கி இருக்கும் அடியவர்களை வணங்குதல் வேண்டும். சுந்தர காண்டம்,இராமாயணம் .மகா பாரதம்,பெரிய புராணம் போன்றவற்றை படிக்க வேண்டும்.

விநாயக பெருமானை எல்லா நாட்களிலும் ,எல்லா நேரத்திலும் வணங்கலாம். ஒரு நிமிடம் மனக்கண்களில் விநாயகரை இருத்தி ,மனமுருகி அழைத்தால் நம்மை தேடி அருள்மழை பொழிய வருவார்.

விபூதி பூசிக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!