வீட்டில் குளிர்ச்சியை உண்டாக்க சில அற்புதமான வழிகள்!

இயற்கையான வழியில் நம் வீட்டில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்க, நம் வீட்டின் முன் ஒருசில செடிகளை வளர்க்க வேண்டும்.

கற்றாழை தாவரம்

வீட்டின் முன் கற்றாழை தாவரத்தை வைத்தால், அது வீட்டின் உட்புற வெப்ப நிலையை குறைத்து, குளிர்ச்சியாக வைப்பதோடு, காற்றின் மூலம் தீங்கு விளைவிக்கக் கூடிய ஃபார்மால்டிஹைடை நீக்க உதவுகிறது.

புடலங்காய் கொடி

தனித்தன்மை கொண்ட புடலங்காய் கொடி இரவு நேரத்தில் ஆக்சிஜனை வெளியேற்றக் கூடியது.

எனவே இத்தாவரம் வெப்பத்தைக் குறைத்து, நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, டொலுவீன் போன்றவற்றை காற்றில் இருந்து தடுத்து, தூயகாற்றை கொடுக்கிறது.

பனை மரம்

இயற்கையில் பனை மரத்தில் ஈரப்பதம் தன்மை உள்ளது. எனவே இது சுற்றுச்சூழலை பாதுகாத்து, காற்றில் இருக்கும் தீய பொருள்களை நீக்கி, நல்ல காற்றினை சுவாசிக்க உதவுகிறது.

பைக்கஸ் தாவரம்

பைக்கஸ் தாவரத்தை அழுகை அத்தி என்றும் கூறுவார்கள். இந்த தாவரமானது, வீட்டின் அறையில் உள்ள காற்றினை தூய்மைப்படுத்தி, வெப்பம் மற்றும் காற்றினால் உண்டாகும் மாசுக்களை குறைக்கிறது.

பன்னம் தாவரம் (பெர்ன்)

பன்னம் செடியானது ஈரப்பதம் மிக்கதாக இருப்பதால், இது அறையின் உள்ளே இருக்கும் காற்றினை புதுப்பித்து தூய்மையாக்குவதுடன் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

கோல்டன் பாத்தோஸ்

பசுமையான இலைகளை கொண்ட இந்த கோல்டன் பாத்தோஸ் தாவரம் வீட்டு அறையினை அழகுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

அதனுடன் காற்று மாசுபடுவதை தடுத்து, கோடைக்காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

– அனைவருக்கும் பகிருங்கள்