கலப்படம் உள்ள தேனா?எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்!

தேனில் உள்ள கலப்படத்தை மிகவும் எளிதில் கண்டுபிடிக்க அற்புதமான சில வழிகள் இதோ,

தேன் வாங்கும் போது, அதன் லேபிளை கவனமாக படிப்பதன் மூலம் அதில் எதை எவ்வளவு கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம்.

சிறிதளவு தேனை எடுத்து விரல்களில் தேய்த்து பார்க்கும் போது, சருமத்தால் உறிஞ்சப்படாமல், கையில் அப்படியே இருந்தால், அது கலப்படம் நிறைந்த தேன்.

சிறிதளவு தேனை எடுத்து சூடு செய்யும் போது, அதன் அடர்த்தி குறைந்து, உருகும். பின் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது, அது மீண்டும் பழைய அடர்த்திக்கு வந்தால், அது கலப்படம் செய்யாத சுத்தமான தேன்.

சிறிதளவு தேனை எடுத்து காகிதத்தின் மீது விட வேண்டும். காகிதத்தின் மூலம் அந்த தேன் உறிஞ்சப்பட்டால், அது போலியான தேன்.

தேனில் சில துளிகள் எடுத்து தண்ணீர் உள்ள பாட்டிலில் விட வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அது பாட்டிலின் அடிப்பகுதி வரை செல்லும். அதுவே நீரில் கரைந்தால், அது கலப்படம் நிறைந்த தேன்.

சிறிதளவு தேனை ரொட்டியின் மீது தடவ வேண்டும். அதன் அடர்த்தி படலமாக இருந்தால், அது உண்மையான தேன். இல்லையெனில் அது கலப்படம் உள்ள தேன்.

சுத்தமான தேனாக இருந்தால் அது நீண்ட நாட்கள் கெட்டித்தன்மை குறையாமல் இருக்கும். அப்படி இல்லையெனில் அது கலப்படம் நிறைந்த தேன் ஆகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்