வாஸ்துப்படி, வீட்டுல எந்த இடத்துல பணத்தை வெச்சா செல்வம் சேரும் தெரியுமா?

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் பார்க்கும் பழக்கம் பொதுவானது. ஒருவரது வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் பெருகும், செல்வம் குவியும், சண்டைகள் அகலும், மன நிம்மதி பெருகும். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் பலருக்கும் நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு வாஸ்துவில் நம்பிக்கை உள்ளதா? வாஸ்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று நம்புகிறீர்களா? அப்படியானல் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

நம் அனைவரது வீட்டிலுமே பணம் இருக்கும். சிலருக்கு வாஸ்துப்படி பணத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியாது. ஒருவரது வீட்டில் வாஸ்துப்படி பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோ இருந்தால், அந்த வீட்டில் செல்வம் அதிகம் பெருகும். நாம் அனைவருமே பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் சிலருக்கு சம்பாதிக்கும் பணம் கையில் நிலைத்திருக்கும். இன்னும் சிலருக்கோ வந்த வழி தெரியாது பணம் கையில் இருந்து செலவாகும். இது அனைத்திற்கும் வாஸ்து தான் காரணம்.

உங்கள் கையில் பணம் அதிகம் சேர வேண்டுமா? வீட்டில் செல்வம் நிலைத்து பெருக வேண்டுமா? அப்படியானால் கீழே அதற்கான சில வாஸ்து டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி நடந்தால், நிச்சயம் வீட்டில் செல்வம் பெருகும்.

வடக்கு திசை சிறந்தது

வடக்கு திசை குபேர திசையாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு பகுதியில் பணப் பெட்டி, நகை அலமாரி போன்றவற்றை வைப்பது நல்லது. இப்படி இந்த திசையில் வைக்கும் போது, அதிர்ஷ்டம் கொட்டி, வீட்டில் செல்வ வளம் இரட்டிப்பாகும்.

தெற்கு நோக்கி வைப்பது நல்லதல்ல

பணத்தை வைக்கும் பெட்டியானது வடக்கு பகுதியில் வடக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டுமே தவிர, தெற்கு திசையை நோக்கியவாறு இருக்கக்கூடாது. செல்வத்தின் தெய்வமான தேவி லட்சுமி தெற்கு திசையில் இருந்து வடக்கு திசையை நோக்கி வந்து அமர்வார் என்று பலர் நம்புகின்றனர். ஆகவே வடக்கு திசையே அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை வழங்கும் திசையாக வாஸ்து கூறுகிறது.

கிழக்கு திசையிலும் பணப் பெட்டியை வைக்கலாம்

சில காரணங்களால் சிலரால் பணப் பெட்டி அல்லது நகை அலமாரியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க முடியவில்லையா? அப்படியானால் அதற்கு மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். இந்த திசையிலும் செல்வம் பெருகும். சொல்லப்போனால், பல தொழிலதிபர்களின் வீடுகளில் பணப்பெட்டி கிழக்கு திசையில் தான் உள்ளது. அதேப் போல் ஒரு கடையில் பணத்தை வாங்குபவர், வடமேற்கு திசையை நோக்கி அமர்ந்திருந்தால், பணம் வைக்கும் பெட்டியானது அவரது இடது பக்கத்தில் தான் இருப்பதே நல்லது. அதுவே கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருந்தார், பணப்பெட்டியை வலது பக்கத்தில் வைப்பதே உகந்தது.

அறையின் நான்கு மூலைகளிலும் பணப் பெட்டியை வைக்காதீர்கள் வீட்டில் பணத்தை எப்போதும் அறையின் நான்கு மூலைகளிலும் வைக்காதீர்கள். குறிப்பாக வடகிழக்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் பணப்பெட்டியை வைக்கக்கூடாது. வடக்கு திசையே மிகவும் சிறப்பான மற்றும் பாதுகாப்பான திசை. தெற்கு பகுதியையும் முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். இதனால் துரதிர்ஷ்டம் வருவதோடு, கையில் உள்ள செல்வம் நீர் போன்று கையில் இருந்து ஓடும்.

பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்காதீர்கள்

பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்கக்கூடாது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் பூஜை அறை பணப்பெட்டியை வைக்கக்கூடாது. வாஸ்துப்படி பூஜை அறையில் பணப்பெட்டியை வைப்பது சிறந்தது அல்ல. ஆகவே இதை மட்டும் தவறாமல் பின்பற்றுங்கள்.

வாசற்படியில் இருந்து பணம் வைக்கும் பெட்டி கண்களுக்கு தெரியக்கூடாது

பணம் வைக்கும் பெட்டி எப்போதும் வாசற்படியில் இருந்து பார்க்கும் படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வீட்டில் உள்ள செல்வத்தை கையில் இருந்து நழுவச் செய்யும். அதேப் போல் வாஸ்துப்பட, பணப்பெட்டியானது குளியலறையைப் பார்த்தவாறோ, கழிவறையைப் பார்த்தவாறோ, சமையலறை, ஸ்டோர் ரூம், அல்லது மாடிப் படிக்கட்டுக்களைப் பார்த்தவாறோ இருக்கக்டது. இதுவும் வீட்டில் செல்வம் பெருகுவதைத் தடுக்கும்.

வேறுசில டிப்ஸ்…

* பணம் வைக்கும் இடம் எப்போதுமே தூசிகளின்றி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே தினந்தோறும் பணம் வைக்கும் பெட்டியை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

* பணப்பெட்டி அல்லது பண அலமாரியில் வடக்கு பக்கத்தில் லட்சுமி கடவுளின் போட்டோவை வைத்து, அவர் முன் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள்.

* பணப் பெட்டியில் பைணம் வைக்கும் போது, அதில் பூச்சிகளோ அல்லது வேறு ஏதேனும் பத்திரங்களோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* எப்போதும் பணப்பெட்டியை காலியாக வைக்காதீர்கள். குறைந்தது 1 ரூபாயாவது அந்த பெட்டியில் இருக்க வேண்டியது அவசியம்.

* அதேப்போல் பணப்பெட்டியை எப்போதும் கடைசி அல்லது முன் அறையில் வைக்காதீர்க்ள்.

* முக்கியமாக பணப்பெட்டியை ஜன்னல் கதவுகளுக்கு அருகே வைக்காதீர்கள். அப்படி வைத்தால், வீடடில் உள்ள செல்வம், வீட்டை விட்டு வெளிறுமாம்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…