அரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பதே உணவு தான். இந்த உணவை சாப்பிடலாமா வேண்டாமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும்.

எந்த உணவைப் பார்த்தாலும், இந்த உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமோ, இதனை எடுத்துக் கொண்டால் கொழுப்பு அதிகரிக்குமோ என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அதனாலேயே பெரும்பாலானோர் உணவு சாப்பிடுவதைக் கூட தவிர்த்துவிடுவார்கள். சிலர் எங்கோ படித்தது, யாரோ சொன்னதைக் கேட்டு…. அரிசி சாதம் சாப்டவே கூடாதாம் டெய்லி மூணு வேலையும் சப்பாத்தி தானாம் என்று சொல்லிக் கொண்டு சப்பாத்தி சாப்பிடுவார்கள்.

அவர்கள் மட்டுமல்ல நம்மில் பலருக்குமே இந்த எண்ணம் இருக்கிறது, அரிசியில் நிறைய கார்போஹைட்ரேட் இருக்கிறது அதைச் சாப்பிட்டால் தொப்பை வரும் அதனால் அதனை சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது, ஆனால் சப்பாத்தியில் அப்படியில்லை, உடல் எடை குறைய சப்பாத்தி சாப்பிடலாம்.

சரி, அரிசியா? சப்பாத்தியா போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள்.

சத்தான உணவு :

நம்மில் பெரும்பாலானோருக்கு சப்பாத்தி என்பது சத்தான உணவு என்ற பிம்பத்துடனே காட்டப்படுகிறது. அதையும் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அரிசி மற்றும் கோதுமை இரண்டிலுமே அதிகப்படியான க்ளைசிமிக் இண்டெக்ஸ் இருக்கிறது.

இரண்டுமே கார்போஹைட்ரேட் அதிகமாக கொடுக்கக்கூடியது தான். இரண்டுமே உங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்திடும்.

அரிசியில் :

கோதுமையுடன் ஒப்பிடுகையில் அரிசியில் சற்று கூடுதலான க்ளைசிமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஒரே மாதிரி தான் செயல்புரிகிறது. அரிசி சாதமோ, சப்பாத்தியோ தொடர்ந்து அதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இன்ஸுலின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.

சிலருக்கு உடனேயே சர்க்கரை நோய் ஏற்படலாம். சிலருக்கு மிகத் தாமதமாக வயதான பிறகு ஏற்படலாம்…. எப்போது சர்க்கரை நோய் ஏற்படும் என்பது இயற்கையின் விதி.

அரிசி தானியம் :

அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் நிறைந்த உணவை மட்டும் மிக அதிக அளவில் உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதினால் உங்கள் உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் சேருகிறது. உடலில் சேருகிற கார்போஹைட்ரேட் நீங்கள் செலவழிக்க வேண்டும் இல்லையெனில் கொழுப்பாக மாறிடும்.

எனர்ஜிக்காக சாப்பிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளாமல், காய்கறி மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன உணவு ?

பொதுவாக உங்களது உணவில் அதிகப்படியான தானியங்களை சேர்த்துக் கொள்வது தவறானது, அது ஆரோக்கியமானது அல்ல. வளரும் பருவத்தினர் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் 30-35 சதவீதத்திற்கு மேல் தானியங்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது.

அதிலும் அலுவலகத்தில் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பணியாற்றுபவர்களுக்கு இது அதிகம் பொருந்தும்.

பவர் ஹவுஸ் :

உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் குறைத்துக் கொள்வது தான் நல்லது, அரிசியை விட கோதுமை மிகச் சிறந்தது என்று சொல்வதில் துளியளவும் உண்மையில்லை.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்தந்த பருவத்தில் கிடைக்ககூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் வாங்கிச் சாப்பிடுங்கள். கிட்டத்தட்ட இதனை பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். ஏனென்றால் அதில் தான் அதிகப்படியான விட்டமின்ஸ், மினரல்ஸ் எல்லாம் குவிந்திருக்கும்.

கோதுமை :

தற்போது விளைவிக்கப்படுகிற கோதுமை பெரும்பாலும் ஹைப்ரிட் வகையில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இதனோடு அரிசியை ஒப்பிடுகையில் அரிசியைதான் பெஸ்ட் என்று சொல்ல முடிகிறது.

இந்த ஹைப்ரிட் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை பெரும்பாலும் க்ராஸ் ப்ரீடாகவே இருக்கிறது. இதனால் இவற்றில் க்ளூட்டான் அதிகமாக இருந்திடும். அது அதிகரித்தாலே தொடர்ந்து க்ளூட்டான், அக்லூட்டின் மற்றும் லெக்டின் ஆகியவை அதிகமாக இருக்கும். இவை எல்லாம் நமக்கு தீங்கு விளைவிப்பவை. விரைவாகவும் செரிக்காது.

பெஸ்ட் :

இதனை ஒப்பிடுகையில் அரிசி உணவு எளிதாக செரிமானம் ஆகும். அரிசியில் இப்படியான பொருட்கள் எதுவும் இருக்காது. பெரும்பாலும் தொப்பை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது செரிமானக் கோளாறு தான்.

ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும் போது அடுத்ததாக மீண்டும் மீண்டும் கார்போஹைட்ரேட் உணவினை எடுத்துக் கொள்வதினால் தான் தொப்பை ஏற்படுகிறது.

பல காலங்களாக…. :

சப்பாத்தி அல்லது ரோட்டியை பல காலங்களாக சாப்பிட்டு வருகிறவர்களும் இருக்கிறார்கள். அது எப்படி இப்போது அலர்ஜி ஆகக்கூடிய உணவாகும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம். கோதுமை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற மிக பழமையான தானியங்களில் ஒன்று. கோதுமைகளில் கிட்டத்தட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறது. ஒரு சில வகைகள் தான் பெரும்பாலும் தற்போது வளர்க்கப்பட்டு பயன்படுத்துகிறார்கள்.

தற்போது வளர்க்கப்படும் கோதுமை பெரும்பாலும் ஹெயர்லூம் வகையைச் சேர்ந்ததாகவே இருக்கிறது. இதனால் க்ராஸ் ப்ரீங் செய்யப்படும். இப்படி க்ராஸ் ப்ரீடிங் செய்யப்படுவதினால் கோதுமை பார்க்கவும், அவற்றின் உள்ளே இருக்கக்கூடிய சத்திற்கும் நிறைய மாற்றங்கள் உண்டாகிறது.

க்ளாசிக் ப்ளண்ட் :

தற்போது விளைவிக்கப்படுகிற க்ளாசிக் ப்ளாண்ட் என்ற வகை நான்கு அடிகள் வரை வளரக்கூடியது, ஆனால் தற்போது வளர்க்கப்படுகிற மார்டன் வீட் இரண்டடி தான் வளரும் அப்போதே முழுமையான கோதுமை தானியத்தை குறுகிய காலத்தில் வழங்கிவிடும்.

இதனால் அதிகப்படியான லாபம் கிடைக்கிறது.

சப்பாத்தி மட்டுமா? :

கோதுமையை சப்பாத்திக்கு மட்டுமா பயன்படுத்துகிறோம், நம்மைத் தவிர பெரும்பாலான துரித உணவுகள் தயாரிக்க கோதுமை மாவு பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான துரித உணவுகளில் கோதுமை மாவு சேர்க்கிறார்கள். அதனை மூலப்பொருளாக வைத்துக் கொண்டு, அதன் மேலே அல்லது அதனுடன் கூடுதலாக சர்க்கரை நிறைந்த இன்னபிற பொருட்களை சேர்த்து வெவ்வேறு பெயர்களில்,வெவ்வேறு வடிவங்களில் நம்மிடமே வந்து விற்கிறார்கள்.

எல்லாம் மாற்றம் :

ஆரோக்கியத்திற்காக உணவு சாப்பிட்ட கலாச்சாரம் மறைந்து, பகட்டிற்காக,நம்முடைய அந்தஸ்த்தை காட்டிக் கொள்ள உணவு சாப்பிடும் கலாச்சாரத்திற்கு வந்துவிட்டோம். நம்மைப் போலவே இங்கே எல்லாமே மாறியிருக்கிறது.

உணவு, கோதுமை வளர்க்கும் முறை, அதற்கு பயன்படுத்தக்கூடிய ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள், காற்று, தண்ணீர் என அனைத்திலுமே கலப்படம் இருக்கிறது. போதாகுறைக்கு எல்லாமே நமக்கு விரைவாக கிடைத்திட வேண்டும் என்ற எண்ணம். உணவு விஷமாகிவிட்டது.

மனிதர்கள் :

இந்த தானியங்கள் உணவினை மட்டுமா எடுத்துக் கொள்கிறோம், அதைத் தாண்டி எத்தனையோ உணவுகளை எடுக்கிறோம், மருந்துகளை சாப்பிடுகிறோம், சாக்லேட் சோட என எனென்னவோ சாப்பிடுகிறோம், அத்தனையையும் இந்த வயிறு செரிக்க வைகக் வேண்டுமே.

உடல் ஆரோக்கியம் என்பது சாப்பிடும் உணவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பது தான் நிதர்சனம்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…