ஆண்பிள்ளைக்கு அரைஞாண் கயிறு, பெண்ணுக்கு கண்டாங்கி சேலை கட்ட சொன்னதன் பின் உள்ள மருத்துவம்..? தமிழன் அறிவியல் வியக்கதக்கது!

அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது.

இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை.

பெண்குழந்தைகளுக்கான அரைஞாண்

தமிழ் நிலப்பகுதிகள் போக பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம்.

பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டி அணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் ஒளிந்துள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.

பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ஹெரணியா என்று அழைப்பர். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும்

உடல் எடை அதிகரிப்பதனால் ஆண்களுக்கு இந்த குடல் இறக்க நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் காலத்திலும் இந்த நோய் இருந்திருக்க கூடும். அதனாலேயே அரைஞாண் கயிறு கட்டும் படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

ஆரம்பகாலத்தில் கருப்பு நிறத்திலேயே அரைஞாண் கயிறு கட்டப்பட்டது. ஆனால் கால மாற்றம் மற்றும் அவரவர் வசதிக்கு ஏற்ப இப்போது வெள்ளி மற்றும் தங்கத்தாலும் அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.

ஞாண் என்றால் கயிறு என்று பொருள். உடம்பின் சரிபாதியை குறிக்கும் பகுதி இடுப்பு. அரை உடலை குறிக்கும் இடுப்பு பகுதியில் கட்டுவதால் இதற்கு அரைஞாண் கயிறு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நமது நவீன அறிவியலுக்கு எட்டியவரை அரைஞாண் கயிறு குடல் இறக்க நோயை தடுப்பதற்காகதான் காட்டப்படுகிறது என்றாலும் கூட அதையும் தாண்டி வேறு சில காரணங்களும் அதில் நிச்சயம் ஒளிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

வெகுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள்.அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம்.

இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள் மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண்களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொள்ள அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில், பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர்.

பின் அன்றில் இருந்து இன்று வரையும் எந்த ஒரு கனமான பொருட்களை எடுத்து வேலை செய்யும்போது துண்டையோ, கயிற்றையோ இடுப்பில் கட்டும் பழக்கம் நம்மோர்க்கு உண்டு. அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது…

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…