இதைப் படித்தால் திருமணம் செய்வதற்கு நிச்சயம் யோசிப்பீங்க…

திருமணம் செய்துகொள்ளாதவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, Journal Social Forces சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 16 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

திருமணம் ஆனவர்களின் உடல் ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இதற்கு வயது மூப்பும் ஒரு காரணமாகும் என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது மனநிலையில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது.

இதனால், அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணங்களை காட்டிலும் திருமணத்தின்போது 3 மடங்கு நேர்மறை எண்ணங்கள் உண்டாகிறது. எனவே, திருமணம் செய்வதை மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறார்கள்.

– அனைவருக்கும் பகிருங்கள்