கைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும்! எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம்!

பத்து மாதம் சுமந்து குழந்தைகளை நலமுடன் பெற்றெடுப்பது, அன்னையின் கடமையாக இருக்கிறது, அதன்பின் அந்தக்குழந்தையை, நலமுடன் வளர்த்து, சிறு சிறு உடல்நல உபாதைகளையும் கண்டறிந்து, அதற்கேற்ப குழந்தைகளுக்கு மருந்துகள் அளித்து, குறிப்பிட்ட வயதை அடையும்வரை, குழந்தைகளை கண்ணின் மணி போல காத்து வருவது வீட்டில் உள்ள மூத்தோர் பாட்டிமார்களின் கடமையாக இருக்கிறது என்றாலும், அந்தப் பாட்டிகளுக்கு, குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளை நீக்குவதில் பெரிய துணையாக, பக்கபலமாக இருப்பது ஒரு மூலிகையாகும்.

வசம்பு, நீர்நிலைகளின் ஓரம் அதிகமாக வளரும், இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத்தாவரமாகும். இஞ்சிக்கொத்தின் இலைகளைப் போல, வசம்பின் இலைகளும் நீண்டு, மூன்றடி உயரம் வரை வளரும் இயல்புடையவை. வசம்பின் நல்ல தடித்த வேர்கள், வளரும் இடங்களில் மூன்றடி ஆழம்வரை பரவிச்செல்லும் இயல்புடையன.

நிலத்தின் அடியே வளரும் வேர்த் தண்டுகள், ஓராண்டில் முதிர்ந்து இள மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் சமயத்தில், இந்த தண்டுகளை வெட்டிப் பதப்படுத்துவர். நல்ல நறுமணமிக்க இந்த வேர்களில், அரிய வேதிப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

இந்த வேர்களே, வசம்பு எனப்படுவது. மிகப்பழங்காலத்தில் இருந்து, தமிழர்களின் மருத்துவத்தில், சிறப்பிடம் வசம்புக்கு உண்டு. பல் முளைக்காத பிறந்த குழந்தைகள் முதல், பல்லு போன வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவருக்கும், உடல்நல பாதிப்புகளுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக, பயன்படுத்துபவர்களின் கைகண்ட நம்பிக்கை மருந்தாக, வசம்பு திகழ்கிறது.

வசம்புவின் பொதுவான நற்பலன்களாக, உடல் வெப்பத்தை சீராக்கி, பசியின்மையைப் போக்கி, உடலின் நச்சுக் காற்றை வெளியேற்றி, மனிதர்களுக்கு நன்மைகள் தரும். வயிற்றில் வளரும் புழுக்களை அளிக்கும் ஆற்றல் மிக்கது.

குழந்தைகளின் உடல் நலம் காக்கும் வசம்பு :

கிராமங்களில், பாட்டிமார்கள் குழந்தைகளின் வயிறு செரிமானமின்மை மற்றும் வயிறு உப்புதல், வயிற்றில் சேரும் நச்சுக் காற்று போன்ற பாதிப்புகளுக்கு வசம்பை தீயில் சுட்டு, அதை இழைத்து, விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் குழைத்து, வயிற்றில் தடவி வருவர்.

குழந்தைகளின் பசியின்மையைப் போக்க, வசம்பை பாலில் நன்கு வேக வைத்து, அந்தப் பாலை பருகத் தருவர், இதன் மூலம், குழந்தைகளின் பசியின்மை மட்டுமல்ல, மற்ற பிற, வியாதித் தொற்றுக்களும் அவர்களை அணுகாமல் காக்கும் ஆற்றல் மிக்கது.

கிராமங்களில், சிறு குழந்தைகளின் கைகளில், வசம்பை நடுவில் துளைவிட்டு, நூலில் கோர்த்து கட்டிவைப்பார்கள், இதன் மூலம், வியாதிகள் எதுவும் குழந்தைகளை அண்டாது. குழந்தைகளை இப்படி காக்கும் தன்மையால்தான், வசம்பை, ‘குழந்தை வளர்ப்பான்’ என்று கிராமங்களில் குறிப்பிடுகிறார்கள்.

வசம்பின் நற்பயன்கள்:

வசம்பை உலர்த்தி வறுத்து, தூளாக்கி, அதில் சிறிது எடுத்து, தேனில் குழைத்து உண்டு வர, சுவாச பாதிப்புகளான ஜலதோஷம், கெட்ட காற்று விலகி, உடனே, நல்ல பசி எடுக்கும்.

மூட்டு வலிக்கு :

கீழ்வாதம் எனும் மூட்டு வலிகளுக்கு வசம்பை, சீமைகாசிக்கட்டியுடன் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, வலி உள்ள இடங்களில் தடவி வர , வலிகள் தீரும்.

வயிற்று பாதிப்புகளுக்கு :

சிலருக்கு உண்ட உணவுகள் செரிக்காமல், வயிற்றைக் குமட்டி வாந்தி வருவது போல இருக்கும், ஆனால் வாந்தி வராது, இதனால், வயிறு பாதித்து, உடல் மந்தமாக இருக்கும். வாந்தி வந்தால்தான், உடல் சோர்வு நீங்கி நலமாகும் எனும் நிலை ஏற்படும்போது, வசம்புப் பொடியை சிறிது எடுத்து நீரில் கலந்து உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாந்தி ஏற்பட்டு, வயிற்று பாதிப்புகள் விலகும்.

வாந்தி எடுக்க விரும்பவில்லை எனில், வசம்பை நெருப்பில் இட்டு சாம்பலாக்கி, தேனில் அந்த சாம்பலைக் கலந்து, நாக்கில் தடவிவர, வாந்தி வயிற்றுக் குமட்டல் விலகும்.

கைக்குழந்தைகளின் வயிற்றுப்போக்கு :

நெருப்பில் வசம்பைக் கரியாக்கி அந்தத் தூளில் சிறிதளவு, தாய்ப்பாலில் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்துவர, குழந்தைகளின் வயிற்றுப்பொருமல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற செரியாமை பாதிப்புகள் விலகும்.

சிறிது வசம்புடன் அதிமதுரத்தையும் சேர்த்து அரைத்து, நீரில் இட்டு நன்கு கொதிக்கவைத்து, சுண்டிவந்ததும், ஆறவைத்து, குழந்தைகளுக்கு இந்த நீரை தினமும் இருவேளை, புகட்டி வரவேண்டும், இதன்மூலம், குழந்தைகளை பாதித்துவந்த ஜுரம் மற்றும் இருமல், வயிற்றுவலி, குணமாகி, குழந்தைகளின் உடல் நலம் தேறும்.

தொண்டை கம்முதல் மற்றும் இருமலைப் போக்க:

சிறிய வசம்புத் துண்டை வாயில் இட்டு அதக்கிக்கொள்ள, வாயின் உமிழ்நீர் சுரப்பில் வசம்பின் சாறு கலந்து உட்சென்று, தொண்டைக்கம்மல் மற்றும் இருமலை போக்கும்.

திக்குவாய் இன்னல்கள் களைய :

சிலருக்கு, வார்த்தைகளை கோர்வையாக உச்சரிக்க முடியாமல், திக்கித்திணறி பேசும் நிலையில் இருப்பார்கள். அவர்கள் காலையில், தினமும் வசம்புத்தூளை தேனில் குழைத்து நாவில் தடவிவர, திக்கித்திக்கி பேசும் பாதிப்புகள் குறைந்து, பேச்சு சரளமாக அமைய வாய்ப்புகள் விரைவில் ஏற்படும்.

பசியின்மை போக்க :

சிலருக்கு வயிற்றில் ஏற்படும் செரிமானமின்மையால், உடலில் நச்சுக் காற்றுக்கள் சேர்ந்து, வயிற்றை உப்பவைத்து, பசியை மறக்கடிக்கும், இதனால், சோர்வாகவும், மந்தமாகவும் காணப்படுவார்கள். இதை சரிசெய்ய, சிறிய வசம்புத் துண்டை நீரில் இட்டு கொதிக்கவைத்து, தினமும் அந்த நீரைப்பருகிவர, வயிற்றில் ஏற்பட்ட செரிமானமின்மை பாதிப்புகள் விலகி, நச்சுக் காற்று வெளியேறி, நன்கு பசியெடுக்கும். இந்த மருந்தே, உடல் சூட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும், வயிற்றுபோக்குக்கும் ஜுரத்துக்கும் மருந்தாகி, அவர்களின் உடல் உபாதைகளை சரிசெய்யும், தன்மை உடையது.

விஷக்கடி பாதிப்புகளுக்கு :

பொதுவான விஷக்கடிகளுக்கு, வசம்பின் வேரை வாயில் இட்டு, நன்கு மென்று அந்த சாற்றை உமிழ்நீரில் சேர்த்து, விழுங்கிவர, விஷங்கள் முறிந்துவிடும். ஏதேனும் மனக்கோளாறுகளில் சிலர், விஷம் அருந்திவிடுவார்கள், அவர்கள் என்ன விஷம் அருந்தினார்கள் என்று தெரியாவிட்டாலும் கூட, வசம்புத்தூளை சிறிதளவு எடுத்து நீரில் கலந்து அவர்கள் வாயில் புகட்ட, விஷங்கள் முறிந்துவிடும்.

சிலர் விஷம் கலக்கப்பட்டிருக்கும் உணவையோ, அல்லது கெட்டுப்போய் விஷமான உணவையோ, தெரியாமல் சாப்பிட்டுவிட்டால், உடல் சீர்கெட்டுப் போகும். இவர்களுக்கு, வசம்புப்பொடியை நீரில் கலந்து பருகவைக்க, பருகிய சற்று நேரத்தில், பாதிப்புகள் நீங்கி உடல்நலம் பெறுவர். விஷக்கடிகளின் வேதனை போக்கிட, கடிபட்ட இடத்தில் வசம்பை மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து தடவி வர, வேதனைகள் மறையும்.

காக்காய் வலிப்பு வியாதி குணமடைய :

சிலருக்கு காக்காய் வலிப்பு எனும் வியாதியின் பாதிப்பில் மயங்கி விழுந்து, கைகால்களை இழுத்துக்கொண்டு உடல் கோணிக்கொண்டு, அதைக் காண்பதே, மிகவும் வருத்தம் அளிக்கும், ஒரு உடல்நல பாதிப்பாக விளங்கி வருகிறது. மேலும், இந்த வியாதி உடையவர்கள், வாகனங்களை இயக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை, இதுபோன்ற பாதிப்புகள் நீங்கிட, வசம்பு, திரிகடுகம், பெருங்காயம், கடுக்காய்ப் பொடி, அதிவிடயம் எனும் மூலிகைக் கிழங்கின் பொடி மற்றும் இந்துப்பு இவை அனைத்தையும் சேர்த்து, நன்கு அரைத்து பொடியாக்கி, தினமும் இருவேளை இந்த மருந்தில் சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வர, காக்காய் வலிப்பு எனும் கடுமையான உடல்நல பாதிப்பு, மறைந்து விடும். மேலும், இந்த மருந்தே, வயிற்றுவலி, உடல் பலகீனம் மற்றும் மனநல பாதிப்பான புத்திசுவாதீனமின்மை போன்ற பாதிப்புகளையும், சரிசெய்யும் அருமருந்தாகிறது.

சிறுநீரக பாதிப்புகளை சரிசெய்யும் வசம்பு:

வசம்புத்தூளுடன் புதினா இலை, சிறிய வெங்காயம், மிளகு மற்றும் சீரகம் இவற்றைச்சேர்த்து, தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து, பருகி வர, சிறுநீரக வலி மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்து, சிறுநீரகத்தின் சீரான இயக்கத்தை மேம்படுத்தும்.

கிருமிகளைக் கொல்லும் வசம்பு நீர் :

சிறந்த கிருமிநாசினியான வசம்பை, கறிவேப்பிலைத்தூள், மஞ்சள் தூள் இவற்றுடன் வெந்நீரில் நன்கு கலந்து, ஆறவைத்த பின், இந்தக் கலவையை, பூச்சிகள் மற்றும் கிருமிகளை விரட்ட, கழிவறை மற்றும் தெருவாசலில் தெளித்துவரலாம், இதன் மூலம் விஷப்பூச்சிகள் வீடுகளை விட்டு விலகிவிடும். மற்றும் கைகால்களைக் கழுவும் ஹேண்ட் வாஷாகக் கூட உபயோகித்து வரலாம்.

இதையே வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் மருந்தாக அளிக்கலாம், இதனால் அவற்றுக்கு ஏற்படும் வியாதித்தொற்றுக்களின் பாதிப்புகள் விலகும். வீடுகளில் வளர்க்கும் தொட்டிச்செடிகள் மற்றும் தோட்டங்களில் உள்ள செடிகளின் மேல் இந்த நீரை அவ்வப்போது தெளித்துவர, பயிர்கள் வியாதி பாதிப்புகள் இன்றி, நன்கு செழித்து வளரும்.

துணிப்பொருட்களை பாதுகாக்கும் வசம்பு:

கிருமிகள் பூச்சிகள் இவற்றை அழிக்கும் தன்மையால், வசம்பை, பழைய ஓலைச்சுவடிகள், தொன்மையான நூல்கள் மற்றும் பாதுகாத்து வைக்கும் முன்னோர்களின் துணிப்பொருட்களில் இட்டு வைப்பார்கள்.

உடல் அலர்ஜியைப் போக்க :

உடலில் அலர்ஜி தோன்றி, மந்த நிலை உண்டாகும்போது, வசம்பில் வெந்தயத்தைக் சிறிது கலந்து, நீரில் ஊறவைத்து, அதன்பின் அந்தக் கலவையை நன்கு அரைத்து, சாப்பிட்டுவர, உடல் அலர்ஜிகள் விலகும்.

சரும பாதிப்பை நீக்க :

சிலருக்கு ஒவ்வாமை மற்றும் இரத்தத்தில் நச்சுக்கள் கலப்பால், சருமத்தில் புள்ளிகள் மற்றும் தடிப்பு, அரிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்ய, வசம்பை மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, வெந்நீரில் குழைத்து, உடலில் தடவி சற்று நேரம் ஊறவைத்த பின் குளித்துவர, சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி, உடல் பொலிவாகும்.

பொன்னுக்கு வீங்கி வியாதி:

இள வயதினரைப் பாதிக்கும் பொன்னுக்கு வீங்கி வியாதி என்பது, தொண்டையில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மம்ப்ஸ் எனும் நச்சு வைரஸ் பாதிப்பால் உண்டாவதாகும். இதனால், முகத்தின் தாடைப்பகுதி வீங்கி, உணவு சாப்பிட முடியாமல், பேச முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள். முற்காலங்களில், இந்த பாதிப்பு வந்துள்ளவர்களின் கழுத்தில் தங்கச்சங்கிலியை போட்டு விடுவார்கள், அதனால், பாதிப்புகள் விலகும் என்ற நம்பிக்கையில். இதனாலேயே இந்த தாடை வீக்க வியாதி, பொன்னுக்கு வீங்கி என்று வழங்கப்படுகிறது.

பொன்னுக்கு வீங்கி பாதிப்பை எளிய முறையில் குணப்படுத்த, சிறிது நீர் சேர்த்து, வசம்பை மஞ்சளுடன் நன்கு பசைபோல அரைத்து, கழுத்து முழுவதும் சுற்றி நன்கு தடவிவர, வீக்கம் விரைவில் வடிந்துவிடும். அத்துடன் வசம்பு குடிநீரை அவ்வப்போது பருகிவர, நச்சு பாதிப்பும் உடலில் இருந்து விலகிவிடும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க :

நரம்புத்தளர்ச்சியால், உடல் சோர்வடைந்து பாதிப்படைபவர்கள், வசம்புத்தூளில் பனை வெல்லத்தைக் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டுவரலாம்.

வயிற்றுப்பூச்சிகள் வெளியேற :

சிலர், வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களால், உடல் நலம் பாதித்து, இளைத்து சோர்ந்து காணப்படுவார்கள். இவர்களின் பாதிப்பைப் போக்க, சிறிது வசம்புடன் இன்றிரண்டு பூண்டை சேர்த்து அரைத்து, அந்தக் கலவையை பனை வெல்லத்தில் சேர்த்து இரவில் சாப்பிட, உடலை பாதித்து வந்த பூச்சிகள் மற்றும் புழுக்கள் எல்லாம் மலத்துடன் வெளியேறும். உடலும் புத்துணர்வாகும்.

வசம்பு குடிநீர்:

வசம்புத்தூளை சிறிது சீரகத்துடன் சேர்த்து சுண்டக்காய்ச்சி, ஆறியபின்னர் பருகிவர, வயிற்றுக்கோளாறுகள், செரிமானமின்மை பாதிப்புகள் நீங்கி, உணவின் சுவை அறியும் நிலை ஏற்பட்டு, நன்கு பசி எடுக்கும்.

பெண்டிரின் மாதாந்திர பாதிப்புகள் அகல :

பெண்களின் சீரற்ற மாதாந்திர பாதிப்புகள் விலக, வசம்புத்தூளை, செவ்வாழைப் பழத்துடன் சேர்த்து, தினமும் சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, பாதிப்புகள் விலகி, மாதாந்திர நிகழ்வு சீராகி, உடல் வேதனை நீங்கும்.

அதிக இன்னல்கள் தரும் உடல் வாயு பாதிப்புகள் நீங்க:

சிலருக்கு உடலில் சேர்ந்த நச்சுக் காற்று பிரியாமல், உடலில் பாதிப்புகள் தரும், இவை நீங்க, வசம்புத்தூளை சிறிது சீரகம் சேர்த்து நன்கு மென்று தின்று அதன் பின், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோரை ஓரிரு தம்ளர்கள் பருகிவர, உடலில் தோன்றிய கெட்ட காற்று விலகிவிடும். தேவைப்பட்டால், மோரில் சிறிது பெருங்காயம் சேர்த்தும் பருகி வரலாம். மேலும், வசம்புடன் ஓரிரு வெற்றிலைகளை சேர்த்து நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கி, சிறிது நீர் பருகி வர, செரிமானமின்மையால் ஏற்படும் வயிறு உப்புதல் பாதிப்பு சரியாகிவிடும்.

உடலில் தோன்றும் சிரங்குகள் மறைய :

வசம்புத்தூளை தேங்காயெண்ணையில் சேர்த்து, குப்பைமேனி இலைச்சாற்றை அதில் கலந்து நன்கு காய்ச்சி, ஆறவைத்து, இந்த எண்ணையை, உடலில் உள்ள சிரங்குகள் மற்றும் புண்கள் இவற்றின் மீது தடவி வர, அவை விரைந்து ஆறிவிடும்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…