நீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷ் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி மோசமாக்கும் என தெரியுமா?

ஒருவேளை, உங்கள் தோழன், அவன் டூத்ப்ரஷ்ஷை எடுத்துவர மறந்துவிட்டான் என்றால்…ஒருபோதும் உங்கள் டூத்ப்ரஷ்ஷை அவனுக்கு தாரை வார்த்து தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர்கள் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள், டூத்ப்ரஷ்ஷிற்கு மிகவேகமாக சென்றுவிட, அதனை நீங்கள் திரும்ப உபயோகிக்கும்பொழுது, பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் பல் துலக்கும்பொழுது, ஒருபோதும் கழிப்பறையை ப்ளஷ் (Flush) செய்யாதீர்கள். பெரும்பாலானோர் காலை நேரங்களில், அவசர அவசரமாக இவ்வாறு செய்வது வழக்கமாகும். ஏனென்றால், நீங்கள் ப்ளஷ் செய்யும்பொழுது, கழிப்பறையில் இருந்து வரும் தண்ணீர் 3 மீட்டர் இடைவேளையில் இருக்கும் டூத்ப்ரஷ்ஷில் பட, அசுத்தமான தண்ணீர் பட்டு, அது உங்கள் ப்ரஷ்ஷில் தங்கிவிடுகிறது.

உங்களுடைய டூத்ப்ரஷ் தலையை ஒருபோதும் ப்ளாஸ்டிக் தொப்பி அல்லது திசுபேப்பர் கொண்டு மூடாதிர்கள். ஏனெனில், அந்த டூத்ப்ரஷ் முட்களின் மீது ஈரப்பதம் தங்கிவிட, அது தரையை நோக்கி இனப்பெருக்கம் செய்து தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது.

உங்கள் டூத்ப்ரஷ்ஷை மேற்பரப்பின் படுக்கை வாட்டத்தில் (நிலையில்) வைப்பதை தவிர்க்கவும். இந்த நிலையில் இருக்கும்பொழுது ஈரம் வெகு நேரத்திற்கு டூத்ப்ரஷ்ஷிலே தங்கிவிடுகிறது.
இதனால், பாக்டீரியா வளரவும் செய்கிறது. ஆகையால், உங்கள் டூத்ப்ரஷ்ஷை செங்குத்தான கோணத்தில் உலர்ந்த கப் அல்லது பிடிப்பானில் (Holder) வைக்க வேண்டியது அவசியமாகும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தவறாமல் டூத்ப்ரஷ்ஷை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் பழைய டூத்ப்ரஷ்ஷை பயன்படுத்தினால்…பல நோய்களும் இதனால் உண்டாகிறது. அதனால், தங்கும் பாக்டீரியாவானது சுத்தப்படுத்த முடியாத நிலைக்கு சென்று நம்மை துன்பத்தில் தள்ளவும் செய்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…