ரத்தக் கொதிப்பை சுலபமாக கட்டுப்படுத்தும் மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ரத்தக் கொதிப்பு! இதய நோயைக் காட்டிலும் ஆபத்தான நோய் இது. ரத்தக் குழாய் சுருங்குவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் , மரபியல் ஈதியாக என உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு.

எப்படியும் சாகத்தான் போகிறமென சொல்லிக் கொண்டு ஆகாததையெல்லாம் சாப்பிட்டு, கண்ட நோய்களை வரவழைத்துக் கொண்டு மாத்திரை, மருந்துகளோடுதான் சாவது சந்தோஷமா? அதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால், எந்த நோயும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்துவிட்டுப் போலாமே..

ஏனென்றால் உயர் ரத்த அழுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரத்தம் சீராக பாய்வது தடைப் பட்டு (ஏதாவது தடங்கலினால்) திடீரென அழுத்தம் அதிகரித்து வேகமாக பாய்வதால் ஏற்படுவதுதான் ரத்த அழுத்தம்.

ரத்த அழுத்தத்தை சரியாக கவனிக்கவில்லையென்றால் அவை இதய நோய், பக்க வாதம். மூளை நோய்கள் என கோமா வரை கொண்டு செல்லும்.ரத்தக் கொதிப்பு வராமல் காக்க வேண்டியது உங்கள் கையில்தான் இருகிறது. நல்ல வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை தேர்ந்தெடுங்கள். எந்தெந்த மூலிகைகள் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் என இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பச்சைப் பயிறு மற்றும் நெல்லி வத்தல்

தேவையான பொருட்கள்:

  • நெல்லி வற்றல்
  • பச்சைப்பயிறு.

செய்முறை: நெல்லி வத்தல் மற்றும் பச்சைப்பயிறு சம அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டர் வரும் வரை சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.நெல்லி வத்தல் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதனை சாதரணமாகவே குழம்பு மற்றும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தம் சுத்தமாகும்.

அகத்திக் கீரை :

அகத்தி கீரை, சுண்டல் வத்தல் ஆகிய இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு :

தேவையான பொருள்கள்:

  • கறிவேப்பிலை
  • எலுமிச்சைச்சாறு

செய்முறை: கறிவேப்பிலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு அரை ஸ்பூன் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்தால் ரத்த அழுத்தம் முழுக்க கட்டுக்குள் வந்துவிடும். பாதிக்கப்பட்ட குழாய்களில் இருக்கும் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.

பூண்டுப் பால் :

தேவையானப் பொருள்கள்:

  • பால்
  • பூண்டு

செய்முறை: பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

கற்பூரவல்லி :

கற்பூர வல்லியில் இருக்கும் கார்வோக்ரால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதோடு, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, இதய நோய்கள் வராமல் காக்கின்றது.

சாப்பிடும் முறை : கற்பூர வல்லியை தினமும் 2 இலைகள் சாப்பிடுவது எளிதான வேலை. அப்படி சாப்பிட பிடிக்காதென்றால் டீயுடன் இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்., சூப் செய்து சாப்பிடலாம்.

லாவெண்டர் :

லாவெண்டர் எண்ணெய்க் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்வதால் ரத்த அழுத்தம் குறையும் என்பது தெரியுமா? மசாஜ் போலவே, லாவெண்டரை சாப்பிட்டாலும் ரத்த அழுத்தத்திலிருந்து விடுதலை பெறலாம்.

பயன்படுத்தும் முறை : தினமும் இரு வேளை லாவெண்டர் தேநீர் செய்து குடியுங்கள். வாரம் 2 நாட்கள் லாவெண்டர் எண்ணெயால மசாஜ் செய்து கொள்ளலாம். அற்புதமான தீர்வை இது தரும்.

குதிரை வாலி :

ரத்த அழுத்தத்திற்கும் , உடலில் நீர் கோர்த்துக் கொள்வதற்கும் (fluid retention) மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆதலால் உடலில் உருவான கெட்ட நீரை தேங்க விடாமல் வெளியேற்றிக் கோண்டிருக்க வேண்டும்.குதிரை வாலி உடலில் உருவாகும் கெட்ட நீரை வெளியேற்றும் இதனால் குழாய்களில் உண்டாகும் வீக்கத்தையும் உயர் ரத்த அழுத்தத்தையும் தவிர்க்கலாம்.

பயன்படுத்தும் முறை : குதிரை வாலி கஞ்சி செய்து குடித்தால் ரத்த அழுத்தம் குறையும். இல்லையென்றால் அதன் இலைகளை தேநீர் தயாரித்து அருந்தலாம்.

சாமந்திப் பூ :

குதிரை வாலி போலவே சாமந்திப் பூ போலவே கெட்ட நீரை வெளியேற்றுகிறது. இது சிறு நீரக செயல்களை தூண்டுவதால் கழிவுகள், வேண்டாத கனிமச் சத்துக்கள் உடலில் தங்காமல் வெளியேற்றப்படுகின்றன. ரத்தக் குழாய்களும் சுத்தபப்டுத்தப்படுகின்றன.

சாப்பிடும் முறை : சாமந்திப் பூ பொடி அரை ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடிக்கலாம். அதுபோலவே தேநீர் தயாரித்து தினமும் 2 முறை குடிக்கலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…