ஞாபகமறதி அதிகமாக உள்ளதா? இதோ உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனைஎடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையானஅளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவுகுறைகிறது . அதனால் மூளையின் செலகள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ் என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை – ஒருமுகக்கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய்தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்புதீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவை தேர்ந்தெடுக்க ஓர் எளியவழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின்பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏணென்றால், இந்தஉணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின், தாது உப்புகள்போன்றவை உள்ளன.

ஞாபகசக்திக்கு:

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம் பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கை கீரை, கறிவேப்பிலை, பச்சை பட்டாணி, பாசி பருப்பு, கொண்டை கடலை, பாதாம் பருப்பு,சோயா பீன்ஸ், சோயா எண்ணெய்,பால், தயிர்,அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்த செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு:

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம், முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்து பாதுகாக்கின்றன

இவற்றால் நல்ல மனப்பாங்கு எப்போதும் செயல்வேகத்துடன் இருப்பது மன உறுதியுடன் எதையும் எடுத்துச் செய்துமுடிப்பது ஆகிய ரசாயான விளைவுகளை இந்த உணவு வகைகள் ஏற்படுத்துகின்றன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும் காரட் சாப்பிடாதவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவப் பேராசியர் பால்கோல்ட் என்பவர் நடத்திய ஆய்வின் முடிவு.

வெள்ளை பூண்டு:

மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபகச் சக்தி உள்ள உயிர்னங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

பூஜையின் போது மணி அடிப்பது எதற்காக?