முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க இவைகளை மட்டும் பின்பற்றுங்கள்!

முகத்தில் உள்ள சுருக்கங்கள் நம்மை வயதனவர்களாக காட்டும். இப்போது இளம் வயதில் உள்ளவர்களுக்கு கூட முகத்தில், கை அல்லது கால்களில் சுருக்கங்கள் காணப்படுகின்றன. இந்த சுருக்கங்கள் அவர்களது அழகை குறைத்துக் காட்டும் தன்மை கொண்டது. சுருக்கங்கள் பொதுவாக 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அதிகமாக காணப்படுகின்றது. இந்த சுருக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமாகவே நல்ல தீர்வு பெற முடியும். ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முட்டைக்கோஸ் இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து, ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் முகத்தை கழுவவும். இதனால் முகம் இளமையும், வசீகரமும் ஆக மாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…