பொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற வெந்தய தெரபி!

எலுமிச்சை சாறு மற்றும் நீர் சம அளவு எடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் கழித்து அந்தகலவையை தலையில் தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து லேசான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு வரவே வராது. முடியின் அடர்த்தி நீங்கள் ஆச்சரியப்படும்படி வளரும்.

#1. வெந்தய தெரபி செய்ய

தேவையானவை:

  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • ஆப்பிள் சைடர் வினிகர் – 1 கப்
  • நீர் – 1 கப்

செய்முறை:

ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட் செய்து அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகர், நீர் கலந்து தலையில் தேய்க்கவும். முடியின் வேர்க்கால்கலில் படும்படி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசவும். இது பொடுகை போக்கி மிகவும் நல்ல நிவாரணம் தரும்.

#2. வேப்பிலை தெரபி செய்ய

தேவையானவை:

  • வேப்பிலை ஜூஸ் – 1/2 கப்
  • பீட்ரூட் – 1/4 கப்
  • தேங்காய் பால் – 1/4 கப்
  • தேங்காய் என்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

மேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து தலைமுடியில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்தால் செம்பட்டை, முடி வறட்சி, பொடுகு எல்லாம் மறைந்து ஆரோக்கியமான பளபளப்புடன் கூந்தல் இருப்பதை காண்பீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…