ஆண்களே! சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் கருப்பான உதடுகளை இயற்கையான முறையில் போக்க டிப்ஸ்!

ஆண்களைவிட பெண்களுக்கே உதடுகளைப் பற்றிய அக்கறை அதிகம் என்றாலும், பாதிப்பு அதிகம் இருப்பதென்னவோ ஆண்களிடம்தான். மன சோர்வு, மன அழுத்தம், புகைபிடிப்பது போன்றவை அவர்களின் உடலுக்கு மட்டுமல்ல, உதடுகளுக்கும் பாதிப்பாகி விடுகிறது.

அதுபோல, உதடுகள் கறுப்பது, உதடு வெடிப்புகள் ஏற்படுவது போன்றவை ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் அதிகம் ஏற்படும், அதுவும் மழைக்காலங்களில் அதிகம் ஏற்படும் ஒரு வியாதியாகிறது, இந்த உதட்டு வெடிப்பு பாதிப்புகள் எல்லாம். இதனால் உதடுகள் வெடிப்புண்டாகி, கறுத்து, முகத்தின் தன்மையை வயோதிகக் கோலமாக ஆக்கிவிடுகின்றன.

இதுபோன்ற பையனின் முக லட்சணம் கண்டவுடனே, ரொம்ப ஸ்மோக் பண்ணுவான் போலருக்கே, வேறு பையன் பார்க்கலாம் என்று பையனின் புகைப்படத்தைப் பார்த்தவுடனே ரிஜக்ட் ஆகிவிடும்.

எப்படி போக்குவது இந்த பாதிப்பை? சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டாலும், கறுத்த உதடுகள் அத்தனை எளிதில், நிறம் மாறி, இயல்பான நிறத்தை அடையாது, என்பதே அவர்களுக்கு இன்னும் வேதனை அளிக்கும் ஒரு நிகழ்வாகும். உதடுகள் முகத்தின் பொலிவை வெளிக்காட்டுவதில், முக்கியமானவை. அவை கறுத்து இருப்பது, முகத்தை பொலிவிழக்க செய்யும் என்பதே உண்மை.

புகைபிடிக்காத ஆண்களுக்கு ஏன் உதடு கருக்கிறது?

அதிக உடல் சூடு எனும் காரணத்தோடும்கூட, உணவு உண்டபின் வாயை முறையாக சுத்தம் செய்யாமல் இருத்தல், சரியாக தண்ணீர் பருகாமல் இருத்தல் இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் பதிப்புகளால் உதட்டில் உள்ள செல்கள் இறந்து அதனால், உதடுகளின் ஈரத்தன்மை குறைந்து, உதடுகள் வெடித்து கறுமை நிறத்தை அடைகின்றன. இதனால், அவர்களின் முகமும் கறுமை நிறமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம், இந்த கறுத்த உதடுகளால் ஏற்படும். ஆயினும் இவற்றை இயற்கையான பொருட்களைக் கொண்டே விரைவில் போக்கி விடலாம்.

ஏன் கருமையாகிறது?

என்னதான் ஃபில்டர் வைத்த கிங்ஸ் பிடித்தாலும், மெலிதான உதடுகளின் மேல் தோலில், புகையை உள் இழுக்கும்போது படியும் நிகோடின் பாதிப்பால், உதடுகள் கறுமை நிறத்தை அடைகின்றன. இந்த பாதிப்பு உதடுகளோடு மட்டும் நிற்பதில்லை, முகத்தில் உள்ள இரத்த நாளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, முகத்தையும் காலப்போக்கில் கறுமை ஆக்கும