உங்கள் தொப்பையை கட்டாயம் குறைக்கும் 8 எளிய வழிகள். முயற்சித்து பாருங்கள்!

ஒவ்வொருவருக்கும் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொப்பை வராமல், தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், அதற்கு தினமும் உடற்பயிற்சியை செய்வதோடு, சரியான டயட்டைக் கட்டாயம் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.

அதிலும் தட்டையான வயிற்றைப் பெற ஒருசில ட்ரிக்ஸ்களைப் பின்பற்றினாலே போதும். குறிப்பாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள், சர்க்கரை மிகுந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பக்கமே செல்லக்கூடாது. மேலும் ஒருவர் தொப்பை வராமல் இருக்க குறிப்பிட்ட சில பழக்கங்களைக் கொண்டிருந்தாலே போதுமானது.

இக்கட்டுரையில் தொப்பை வராமல் தட்டையான வயிற்றைப் பெற மேற்கொள்ள வேண்டிய 8 செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, தட்டையான வயிற்றைப் பெறுங்கள். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் தட்டையான வயிற்றைப் பெறுவது உறுதி.

1 லிட்டர் தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீரைக் குடியுங்கள். ஏனெனில் நீரில் தான் கலோரிகள் ஏதும் இல்லை. அதோடு தண்ணீர் வயிற்றை நிரப்பி, உடல் எடைக் குறைக்கவும் உதவும். எப்படியெனில் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை எளிதாக்கி, எடையை எளிதில் குறைக்கச் செய்யும்.

காலையில் கார்போஹைட்ரைட் அதிகம் நிறைந்த மற்றும் ஸ்டார்ச் உணவுகளுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அது மெட்டபாலிசத்தின் வேகத்தைக் குறைத்து, உடல் பருமனை உண்டாக்கும். எனவே காலை வேளையில் ஆரோக்கியமான உணவான இட்லியை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம் அல்லது ஆப்பிள்

தொப்பையைக் குறைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்வதன் முன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சியுடன் டயட்டையும் இணைத்துப் பின்பற்ற வேண்டும். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. மாறாக அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறையத் தான் உதவும். எனவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில், கண்டதை சாப்பிடாமல், பழங்களை சாப்பிடுங்கள். இதனால் பழங்கள் எடை குறையத் தூண்டும். அதிலும் வாழைப்பழம், ஆப்பிளில் இரும்புச்சத்து உள்ளது. இவை தொப்பையைக் குறைக்க அவசியமான சத்தாகும்.

சரிவிகித காலை உணவு

காலை உணவின் போது சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். அதிலும் முழு தானிய பிரட், தினை போன்றவற்றுடன், காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுங்கள். அசைவ உணவாளர்களாக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கொள்வது நல்லது. அதோடு நற்பதமான பழங்கள் மற்றும் ஒரு பௌல் தயிர் அல்லது மோர் உட்கொள்ளலாம்.

காலை உணவிற்கு பின்

காலை உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் நேரத்தில் ஏதேனும் சாப்பிட நினைத்தால், ஒரு கப் க்ரீன் அல்லது ப்ளாக் டீ மட்டும் குடியுங்கள். எக்காரணம் கொண்டும் காலை உணவின் போதே க்ரீன் டீ குடிக்காதீர்கள். முக்கியமாக க்ரீன் அல்லது ப்ளாக் டீயை குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சிலர் ஓட்ஸ் பிஸ்கட் சாப்பிடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.

மதிய உணவு

மதிய வேளையில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது சிறந்தது. அதிலும் லெட்யூஸ், செலரி போன்ற நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாலட் செய்து உண்பது வயிற்றைக் குறைக்க உதவும். வேண்டுமானால், க்ரில் செய்யப்பட்ட இறைச்சி அல்லது மீன் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

சைவ உணவாளர்களாக இருந்தால், கைக்குத்தல் அரிசியுடன், தால் சேர்த்து சாப்பிடலாம். இன்னும் சிம்பிளாக சாப்பிட நினைத்தால், தயிர் ஸ்மூத்தி மற்றும் ப்ரௌன் பிரட் சாண்ட்விச் சாப்பிடுங்கள்.

4-5 மணிக்கு

இந்த நேரத்தில் ஒரு கப் டீ குடிக்கலாம். காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் பால் போன்ற தொப்பையைப் பெரிதாக்கும் பொருட்கள் உள்ளன. வேண்டுமானால் ஒரு கப் ப்ளாக் காபி குடிக்கலாம். அதோடு ஒரு துண்டு கொய்யா அல்லது பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள். இவையும் தொப்பையைக் குறைக்க உதவும்.

இரவு உணவு

இரவு உணவை உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த உணவிற்கு பின் தூங்க செல்வதால், கலோரிகள் குறைவாகவே எரிக்கப்படும். எனவே இரவு உணவை தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே உட்கொள்ளுங்கள். அதிலும் இரவு உணவு உண்பதற்கு முன் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம். அதோடு, க்ரில் செய்யப்பட்ட காய்கறிகள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடுவது சிறந்தது. மேலும் ப்ரௌன் பிரட் அல்லது பாஸ்தா போன்றவற்றை அளவாக சாப்பிடலாம். ஆனால் இரவு நேரத்தில் சாதம் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

டெசர்ட்

இரவு உணவிற்கு பின் இறுதியாக, ஒரு பௌல் தயிர் அல்லது சிறிது நற்பதமான பழங்களை சாப்பிடுங்கள். இரவில் சர்க்கரையை சேர்க்காதீர்கள். ஏனெனில் இது தூக்கத்தைப் பாதிப்பதோடு, தொப்பையையும் பெரிதாக்கும்.

குறிப்பு

தொப்பை அல்லது எடையைக் குறைக்க நினைப்போர், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு நடந்து வந்தால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்கலாம். ஆனால் இப்பழக்கங்களை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒருவேளை இப்பழக்கங்களை நிறுத்துவதாக இருந்தால், மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். இல்லாவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…