எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

தூக்கம்… எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதிய அளவு தூக்கம் தான் மிக அவசியம். நமக்கு எது போதிய அளவு தூக்கம்? போதிய அளவு தூக்கம் என்பது எவ்வளவு நேரம்? என்பது தெரிவில்லை. இதற்கான விடை, உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது.

வயதும், தூக்கமும் :

0-3 மாதம்

ஒரு நாளைக்கு 14-17 மணி நேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் 11லிருந்து 13 மணி நேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.

4-11 மாதம்

தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக்கூடாது.

1-2 வயது

தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும். ஆனால் 9லிருந்து 16 மணி நேரங்கள் வரை தூங்கலாம்.

3-5 வயது

தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்க வேண்டும். ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

6-13 வயது

ஒன்பது மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை தினமும் தூங்க வேண்டும். தினமும் 7 மணி நேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணி நேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல.

14-17 வயது

8லிருந்து 10 மணி நேரம் வரை தினமும் தூங்க வேண்டும். ஆனால் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணி நேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு.

18-25 வயது

தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம். ஆனால் தூக்கம் 6 மணி நேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலாக போகக்கூடாது.

26-65 வயதிற்கு மேல்

இவர்கள் தினசரி 7லிருந்து 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணி நேரத்துக்கு மேலாக போகக்கூடாது.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…