எந்த திசைநோக்கி விளக்கு ஏற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும்!

தினமும் வீட்டில் விளக்கேற்றுவதனால் சகலபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் புரிவாள், செல்வம் பெருகும்.

விளக்குகேற்றுவதற்காக சில விதிமுறைகளானது உள்ளது. மேலும் விளக்கேற்றும் திசையினை பொருத்தும் பலன்கள் உண்டு.

பொதுவான விதிமுறைகள்

விளக்கில் எண்ணெய்விட்டு எத்தனை திரி போட்டு இருந்தாலும் அத்தனையினையும் ஏற்றிவிட வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு திரிகளாவது ஏற்றவேண்டும்.

பூஜை வீட்டில் தொடங்கும் முன்னர் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றிவிட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

விளக்கு தீபம் ஏற்றும் போது முதலில் எண்ணெய் அல்லது நெய் முதலில் ஊற்றிவிட்டே திரியினை போடவேண்டும். இவ்வாறு முறையாக ஏற்றும் தீபமானது வீட்டில் இருளை அகற்றி, வீட்டில் உள்ள எல்லோரின் மனதில் உள்ள இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையினை தூண்டி, சிறந்த முறையில் செயலாற்ற வைத்து, நிலையான அமைதியினை தரும்.

இரண்டு திரியினை சேர்த்து முறுக்கி ஏற்றுவது நன்மை தரும்.

விளக்கு ஏற்றும் போது கிழக்கு திசையினை நோக்கி ஏற்றவும். நாம் விளக்கேற்றப்பயன்படுத்தும் திரியினை பொருத்து பலன்கள் கிட்டும்.

தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்த வேண்டும்.

தீபம் வெறும் விளக்கல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

திசைகள்

கிழக்கு – இந்த திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

மேற்கு – இந்த திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனீபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீக்கும்.

வடக்கு – இந்த திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு – இந்த திசையில் விளக்கேற்றக்கூடாது.

– அனைவருக்கும் பகிருங்கள்