பாதாம் பருப்பின் மகத்தான மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஆண்மை பெருக

பருப்பு (10) எடுத்து நீரில் ஊறவைத்து மேல்தோலை நீக்கி பாலில் அரைத்து தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லுமுன் பருகி வந்தால் ஆண்மை பெருகும்.

இதயநோய் வராமல் தடுக்க

பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

பாதாம் பருப்பை தினமும் சிற்றுண்டி சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் ஏனென்றால் பாதாமில் சோடியம் குறைவாகவும் , பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

புற்றுநோய் வராமல் தடுக்க

பாதாம் பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும் . அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.

இரத்தசோகையை குணப்படுத்த

பாதாம் பருப்பை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் இவற்றில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன் இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால்,  அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.

நினைவாற்றல் அதிகரிக்க

தினமும் பாதாம் பருப்பை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் பாதாம் பருப்பில் காணப்படும் பாஸ்பரஸ் , ஒமேக 3 , போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் மூளையை பலப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்க செய்து புத்துணர்ச்சியடைய செய்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…