முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

எல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முகத்திற்கு ஒரு க்ரீம், கை தனி க்ரீம், கால்களுக்கு ஒரு க்ரீம் என்று உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு க்ரீம்மை வாங்கி பயன்படுத்துவோம்.

பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இப்படி கருப்பாக இருப்பதால், ஃபேஷனான பல உடைகளை உடுத்த முடியாமல் பல பெண்கள் வருத்தப்படுவார்கள்.

ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும். இக்கட்டுரையில் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

சர்க்கரையில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் நீர் பயன்படுத்திக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முழங்கையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமை அகலும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும்.

எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நீங்கா கருமையை அகற்றும்.

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்த்து பின் நீரில் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…