தினமும் இந்த ஜாம்மை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது!

உலகில் 10 பேரை எடுத்துக் கொண்டால், அதில் ஒருவருக்கு நிச்சயம் மலச்சிக்கல் இருக்கும். அந்த அளவில் மலச்சிக்கல் ஏராளமான மக்களால் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. இந்த மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.

ஒருவர் தாங்கள் சந்திக்கும் மலச்சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு, அதை சரிசெய்ய முயலாவிட்டால், அதனால் மூல நோயால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். மூல நோய் வந்துவிட்டால், பின் நிம்மதியாக உட்கார முடியாமல் மிகுந்த கஷ்டத்தைப் படநேரிடும். எனவே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ, அதை உடனே செய்யுங்கள்.

மலச்சிக்கலில் இருந்து விடுபட கடைகளில் மலமிளக்கும் மருந்துகள் விற்கப்பட்டாலும், அவற்றை தினமும் பயன்படுத்தினால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதோடு மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்தும் எந்த ஒரு மருந்தும் மிகவும் ஆபத்தானவை. எனவே கவனமாக இருங்கள்.

ஆனால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு பல எளிய இயற்கை வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் மலச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுவிக்கும் ஓர் நேச்சுரல் ஜாம் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை வழிகள் யாவும் பக்கவிளைவுகள் அற்றவை. சரி, இப்போது மலச்சிக்கலைப் போக்கும் நேச்சுரல் ஜாம் குறித்து காண்போம்.

தினமும் இந்த ஜாமை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது!

தேவையான பொருட்கள்:

  • உலர்ந்த கொடிமுந்திரி – 1 கப்
  • பேரிச்சம் பழம் – 1 கப்
  • தண்ணீர் – 5 கப்

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, பின் அதில் உலர்ந்த கொடி முந்திரி மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து, ஜாம் போன்றாகும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். இதனால் 20 டேபிள் ஸ்பூன் அளவிலான ஜாம் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை:

மலச்சிக்கலில் இருந்து விடுபட தயாரிக்கப்பட்ட ஜாம்மை காலை உணவின் போது, தயிர், செரில் அல்லது பிரட் டோஸ்ட் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

ஏன் கொடிமுந்திரி?

கொடிமுந்திரியில் நார்ச்சத்துக்கள் மற்றும் சார்பிட்டால் என்னும் மலத்தை இளக்கும் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. மலச்சிக்கலில் இருந்து விடுபட, இந்த கொடிமுந்திரியை பலவாறு பயன்படுத்தலாம்.

வேறு வழி:

உலர்ந்த கொடிமுந்திரியை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் அந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் கிடைப்பதை நன்கு காணலாம். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1

அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து, 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

வழி #2

ஒரு பௌலில் வெள்ளரிக்காய், கேரட், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி, அதில் சிறிது சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 1-2 முறை சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

வழி #3

நாள் முழுவதும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் சுடுநீர் இறுகிய மலத்தை இளக்கச் செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

வழி #4

மலச்சிக்கலால் அசுத்தமான வயிற்றை சுத்தம் செய்ய, சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணம் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றையும் சுத்தம் செய்யும்.

வழி #5

வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் அகலும்.

வழி #6

இன்னும் எளிய வழியில் மலச்சிக்கலில் இருந்து விடுபட நினைத்தால், எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் எப்பேற்பட்ட மலச்சிக்கலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வழி #7

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி மற்றும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

வழி #8

திராட்சையில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து திராட்சையை சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…