முகத்தை வசீகரமாக்கும் அழகு தெரபி – அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் பொதுவாக ஆரோக்கியமான, பொலிவான சருமம் கிடைக்க வேண்டுமென்றால் எல்லா விதமான அழகு பராமரிப்பு வழிகளையும் பின்பற்ற தயாராக இருப்பார்கள். இந்த ஏக்கம் தான் ஒவ்வொரு வருடமும் அழகு சாதனப் பொருட்களின் வருகையை அதிகரிக்கிறது. தற்போது மார்க்கெட்டில் புதியதாய் வலம் வரும் பியூட்டி தெரபி பற்றி உங்களுக்கு தெரியுமா. இந்த தெரபி உங்களை ஒரு சில நிமிடங்களில் அழகு படுத்தி விடுமாம். அப்படிப்பட்ட இந்த லேட்டஸ்ட் தெரபியை பற்றிய தகவலை தான் இக்கட்டுரையில் கூற உள்ளோம்.

நமது முகத்தில் உள்ள சருமம் மிகவும் சென்ஸ்டிவ் ஆன ஒன்றாகும். எனவே தான் சுற்றுப் புற தூசிகள் மற்றும் மாசுக்களால் பாதிப்படைகிறது. இதற்கு நீங்கள் தினமும் முகத்தை சுத்தப்படுத்தினால் மட்டும் போதாது. ஏனெனில் நீங்கள் வேலை செய்து களைப்படையும் போது நாள் முடிவில் மறுபடியும் உங்கள் சருமம் பொலிவிழந்து போய் விடும்.

இதன் விளைவாக பிறகு சரும சசைகள் தொய்வடைந்து சுருக்கம், சரும கோடுகள் போன்றவை தென்பட ஆரம்பித்து விடும். எப்பொழுதும் அழகான சருமத்தை ஒரு நொடிப் பொழுதில் பெற வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் கனவாகவே உள்ளது. இந்த கனவின் ஏக்கம் தான் அவர்களை நிறைய பியூட்டி முறைகளை தேடி போகச் செய்கிறது.

நிறைய பெண்கள் தங்கள் உடல் அழகுக்காக நிறைய பியூட்டி தெரபிகளை விரும்புகின்றனர். இதிலிருந்து நீண்ட ஒரு பலனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களது வயதான அறிகுறிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து பொலிவான, புத்துணர்ச்சியான சருமத்தை பெற ஆசைப்படுகிறார்கள்.

இதனால் தான் நிறைய பியூட்டி தெரபி முறைகள் வந்த வண்ணம் உள்ளன. சில வினோதமான முறைகள் கூட முகத்தை க்ளீனிங் செய்ய வந்துள்ளது. இவைகள் உடனடியாக முக சருமத்திற்கு புதுப் பொலிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

தற்போது லேட்டஸ்ட் ஆக மார்க்கெட்டில் வலம் வரும் ஒரு முறை தான் பேஷியல் கப்பிங். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம்.

இது எப்படி வேலை செய்கிறது:

பேஷியல் கப்பிங் முறையில் நிறைய தொடர்ச்சியான உறிஞ்சும் கப்களை பயன்படுத்துகின்றனர். இந்த கப் அந்த இடத்தில் ஒரு வெற்றிடத்தை நிறுவுகிறது. இந்த கப் அப்போது சரும துளைகளிலுள்ள அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை உறிஞ்சி விடுகிறது. இது தசைகளை தொய்வாக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து நமது சருமத்தையும் இறுக செய்கிறது. பிறகு உறிஞ்சும் கப் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சரும துளைகளில் உள்ள அழுக்கு, எண்ணெய் பசை எடுத்த பிறகு முக சருமம் ஒரு புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமத்தின் தன்மையும் நன்றாக இருக்கிறது., இந்த முறை ஒரு சிறந்த முறை. எந்த வித சரும பாதிப்புகளும் அந்த இடத்தில் ஏற்படுவதில்லை. இது எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்ற ஒரு முறையாகும்.

பேஷியல் கப்பிங் பயன்கள்

இது ஒரு முற்றிலுமாக வெளியில் செய்யக்கூடிய தெரபி ஆகும்.

இரத்த ஓட்டம் அதிகரித்தல்

இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாகவும் மற்றும் சருமத்தின் தன்மையையும் மேம்படுத்துகிறது.

சரும துளைகளின் அடைப்பை நீக்குதல்

இதில் பயன்படுத்தப்படும் உறிஞ்சி முறை சரும துளைகளிலுள்ள அடைப்பை நீக்கி சரும துளைகளை திறக்கிறது. எனவே உங்கள் பியூட்டி க்ரீம் மற்றும் சீரம் நன்றாக சருமத்தில் வேலை செய்ய உதவுகிறது. இதனால் நீங்கள் நல்ல ஒரு பலனை அடைய முடிகிறது.

சுருக்கங்களை நீக்குதல்

இது சருமத்தை இறுக செய்வதால் சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது.

சரும நச்சுக்களை வெளியேற்றுதல்

சரும துளைகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக மாற்றுகிறது.

நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகைகள் தங்களின் சரும பளபளப்புக்கும் புதுப்பொலிவுக்கும் பேஷியல் கப்பிங் முறையை தான் காரணமாக சொல்லி இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இந்த பியூட்டி தெரபி முறை மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.

நமது நாட்டில் கூட இந்த ட்ரெண்ட் சீக்கிரம் வரப் போகிறது. இந்த பியூட்டி தெரபி முறை பற்றி தெரியவில்லை என்றால் ஆன்லைனில் இதற்கான பியூட்டி கிட் எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறைகள் எல்லாம் இருக்கின்றன. எனவே இதை நீங்கள் வீட்டிலேயே செய்தும் பலன் பெற முடியும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…