உடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்!

உடல் வலிமை பெற

உடல் வலிமை பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற தேன் சேர்ந்த லேகியம் தயார் செய்து உட்கொள்ளலாம் .

லேகியம் தயாரிப்பு முறை

  • வில்வப்பூக்கள் 500 கிராம்
  • கற்கண்டுத் தூள் 250 கிராம்
  • தேன் 100 கிராம்
  • ஏலக்காய் 20 கிராம்
  • சுக்கு 10 கிராம்

ஏலக்காயையும் சுக்கையும் பொடித்துப் போட்டு கற்கண்டைப் பாகாக்கிக் கிளற வேண்டும்.

பிறகு வில்வப் பூக்களை கலந்து நன்றாகக் கிளறி விட வேண்டும்.

பூக்கள் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து தேனைச் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த லேகியத்தை தினமும் நெல்லிக்காய் அளவு காலை மாலை என இருவேளை 40 நாட்கள்
உட்கொண்டு வர உடல் நன்கு வலிமை பெறும்.

நரம்பு மண்டலம் நன்கு உறுதி பெற்று சிறப்பாக இயங்கும்.

ஜீரண சக்தி வளரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

நியாபக சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப் புண் ஆற

வில்வக் காய்களைப் பிஞ்சாக சேகரித்து சதைப் பகுதியை எடுத்துக் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு தூளாக்க வேண்டும் .

இந்தத் தூளில் 500 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு இரண்டு லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.

நீர் கால் லிட்டராகச் சுண்டக் காய்ந்ததும் இறக்கி ஆறவைக்க வேண்டும். காய் சதையை நன்றாகப் பிசைந்து சக்கைகளை அகற்றி விட வேண்டும்.

இந்த கசாயத்தில் 200 கிராம் தேன் சேர்த்து மறுபடியும் இலேசாகக் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த திரவத்தில் ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி என ஒரு நாளைக்கு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.

இரைப்பை புண் ,குடல் புண் அகலும் .

இதனையே வேறு விதமாக பக்குவம் செய்தும் சாப்பிடலாம்

வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக வெண்ணெய் போல அரைக்க வேண்டும்.

அரைத்த விழுதுடன் அரை லிட்டர் பசுவின் பால்விட்டு அடுப்பிலிட வேண்டும். சதை நன்கு வெந்ததும் 250 கிராம் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும் .

லேகிய பதத்திற்கு வந்ததும் கால் லிட்டர் பசுவின் நெய்யும் கால் லிட்டர் தேனும் சேர்த்து நன்கு கிளறி ஆறவைத்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த லேகியத்தில் நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மாலை என இருவேளை உட்கொண்டு பசுவின் பாலை அருந்த வேண்டும்.

இரைப்பை புண் ,குடல் புண் ,நீண்ட கால வயிற்று வலி நீங்கும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…