பட்டு போல் பளபளப்பு கூந்தலுக்கு செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்கள்!

நாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது. கூந்தலுக்கு கலரிங் செய்வது மிகவும் தவறு. இருப்பினும் அனைவரும் இப்போது செய்து கொள்வது ஃபேஷனாகி போய்விட்டது.இவற்றினால் கூந்தல் பலவீனப்படுவதோடு மட்டுமல்லாமல் பொடுகு தொல்லையும் வலுக்கிறது.

இவற்றிற்கெல்லாம் அருமையான தீர்வு செம்பருத்தி மாஸ்க்.

செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள் அற்புதமான கண்டிஷனர்.தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ,சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.

செம்பருத்தி மாஸ்க் செய்வது எப்படி?

செம்பருத்தியை தனியாக இல்லாமல் யோகார்ட் அல்லது வெந்தயத்துடன் சேர்த்து கலவையை தயாரிக்கவும்.இது கூந்தலை இன்னும் அழகாக்கும், பலப்படுத்தும்.

முதலில் செம்பருத்தி-யோகார்ட் கலவை செய்யும் முறை!

  • ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் -8-10
  • யோகார்ட்-3-4 டேபிள் ஸ்பூன்
  • தேன் -1 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ்மெரி எண்ணெய்- சில துளிகள்(விருப்பமிருந்தால்)

1.முதலில் செம்பருத்தியின் தண்டினையும்,அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும்.

2.அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும்.தேவைக்கேற்ப நீர்விடவும்.

3.அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.

4.விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம்.ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவிபுரிகிறது.

இப்போது இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களிலிருந்து தடவ வேண்டும்.முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.

செம்பருத்தி-வெந்தய கலவை செய்யும் முறை!

  • செம்பருத்தி இலைகள்- கை நிறைய
  • ஊற வைத்த வெந்தயம்-1-2 தேக்கரண்டி (இரவில் ஊற வைத்து மறு நாள் உபயோகப்படுத்த வேண்டும்)

1.செம்பருத்தி இலையை அழுக்கு போக நன்கு கழுவ வேண்டும்

2.அதன் காம்பினை அகற்றி மிக்ஸியில் னைஸாக அரைக்கவும்.

3.ஊற வைத்த வெந்தயத்தையும் நன்கு அரைத்து ,செம்பருத்தி இலை பேஸ்ட்டுடன் நன்கு கலக்கவும்.

இப்போது அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…