இடதுபக்கம் படுத்து தூங்கினால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

தூங்கும் போது, நாம் அனைவரும் பலவிதமான கோணங்களில், படுத்து உறங்குவோம்.

அதிலும் நேராக படுத்து தூங்குவது தான் மிகவும் நல்லது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இந்த விஷயத்தில் உண்மை என்னவென்றால் நேராக படுத்து உறங்குவதை விட இடது பக்கமாக படுத்து தூங்குவதே மிகவும் சிறந்தது என்று விஞ்ஞான பூர்வமாகக் கூறப்படுகிறது.

எனவே நாம் இடது பக்கமாக படுத்து உறங்குவதால், நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இடதுபக்கமாக உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் இடது பக்கமாக தூங்கும் போது, நமது உடலின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தேங்கி இருக்கும் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அனைத்தும் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.

நாம் இடது பக்கமாக தூங்குவதால், நமது உடம்பில் உள்ள இரைப்பை மற்றும் கணையம் போன்ற இரண்டு உறுப்புகளும் இயற்கையாக சந்திக்கும். இதனால் நமக்கு உணவு செரிமானம் சீராக நடைபெறும்.

இடது பக்கமாக உறங்குவதன் மூலம் நமக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும் இரைப்பையில் இருக்கும் அமிலமானது, உணவுக்குழாய் வழியே மேலே ஏறாமல் தடுக்கிறது. இதனால் நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.

நாம் இடது புறமாக தூங்கும் போது, பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடல் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படுகிறது.

இடது பக்கமாக தூங்கும் போது, நாம் சாப்பிடும் உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படுகிறது. இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடிகிறது.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…