ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது. அழகில் மட்டுமா? உடல் நலத்திலும்தான்.

ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற மிக அருமையான வேதிச் சத்துக்கள் ரோஜாப் பூக்களில் அடங்கியுள்ளன.

இப்படி ஆல் இன் ஆல் அழகு ரோஜாவாய் இருக்கும் இதன் நன்மைகளையும், என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டு வந்தால்வயிற்றுப் போக்கு குணமாகும். ஆனால் ரோஜா இதழ்களை உங்கள் போக நன்றாக கழுவி அதன் பின் உபயோகியுங்கள்.

ரோஜாக்கள் மூல வியாதிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மூல வியாதினால் உதிரப் போக்கு இருந்தாலுஇம் இது கட்டுப்படுத்துகிறது. ரோஜா இதழ்களை நீர்ல் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த நீரை வடிக்கட்டி குடித்தால் நல்ல பலன் தரும்.

ரோஜாப் பூவை கற்கண்டுடன் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து அன்றாடம் சூரிய ஒளியில் வைத்து, அதன் பின் இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு நல்ல உணர்வையும் தந்து மகிழ்விக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் உடலில் தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி நீரை எடுத்துச் சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைப் போல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்

நம்ப முடியுமா? உண்மையில் ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் கையளவு ரஒஜா இதழ்களை சாப்பிட்டால் அது நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. ரோஜா இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீரில் நிறம் மாறிய பின் நீரை வடிகட்டுங்கல். அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…