உங்கள் ஈறுகள் மேலே ஏறியது போன்று உள்ளதா? அதை சரி செய்ய எளிய டிப்ஸ்!

வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம், பற்காறைகளின் உருவாக்கம், புகைப்பிடித்தல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற காரணத்தினால் பற்களின் ஈறுகள் மேலே ஏறி அசிங்கமான தோற்றத்தை அளிக்கும்.

இதனை தடுக்க ஈறுகளை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்காக தினசரி பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இதோ,

ஈறுகளை அழகாக்க தினசரி பின்பற்ற வேண்டியவை?

1 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஈறுகள் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

காலையில் பற்களைத் துலக்கி விட்டு சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து வாயைக் கழுவி வந்தால் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

காலையில் பல் துலக்கும் முன் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களைத் துலக்க வேண்டும். இதனால் ஈறுகள் வளர்ச்சி அடைவதோடு, பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

பற்களைத் துலக்கும் போது, 2 துளிகள் கிராம்பு எண்ணெய்யை பற்பசையுடன் சேர்த்து துலக்கி வந்தால் ஈறுகள் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…