தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாத பொருட்கள் என்ன?

அன்றாடம் கடவுளை வணங்கும் போது, நம்மை அறியாமல் ஒருசில தவறுகளை செய்து விடுவோம்.

ஆனால் அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன்கள் ஏதும் கிடைக்காது என்று கூறுவார்கள்.

அந்த வகையில் நாம் பூஜை செய்யும் போது, சில பொருட்களை தரையில் வைத்து வணங்கக் கூடாதாம். ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை அளிக்கும்.

தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாத பொருட்கள் என்ன?

வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வைத்திருந்தால், அதை தரையில் வைக்காமல் ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைக்க வேண்டும்.
பூணூல் என்பது இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக் கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.
ஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றும் போது, அதை தரையில் வைக்காமல், ஒரு சுத்தமான துணியின் மேல் வைத்து ஏற்ற வேண்டும்.
தங்கத்தில் லட்கூமி தேவி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்கக் கூடாது.

– அனைவருக்கும் பகிருங்கள்

வெயிலை சமாளிக்க அட்டகாசமான சில வழிகள்!