செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம் கடைபிடிப்பது எப்படி?

வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் தான் ஆண்டு தோறும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவளுமான லட்சுமி தேவி .

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர்.

இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என சாஸ்த்திரத்தில் கூறப்படுகின்றது.

ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து பெண்கள் வழிபடுகின்றனர் .

இவ்வாறு வீடுகளிலும் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் அம்மனது முகத்தினை உருவாக்கி வைத்து. அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்து ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர்.

ஒன்பது நாட்கள் விரதமிருந்து இப்பூஜையினை மேற்கொள்வார்கள். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது.

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்