ஆண்களையும் வெகுவாக பாதிக்கும் பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள்!!

பொதுவாக பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று கருதப்பட்டு வந்த பல உடல்நலப் பிரச்சனைகள் இப்போது ஆண்கள் மத்தியிலும் பரவாலாக அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது ஏதோ, காய்ச்சல், சளி போன்ற தாக்கம் அல்ல. மார்பக புற்றுநோயில் இருந்து முடக்குவாதம் வரை பல அபாயமான உடல்நிலைப் பிரச்சனைகளும் கூட பெண்களுக்கு ஏற்படும் அளவு அதிகமாக ஆண்களுக்கும் உடல்நலத்தை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது.

இனி ஆண்களை ஆண்களை வெகுவாக பாதிக்கும் பெண்களின் உடல்நிலைப் பிரச்சனைகள் பற்றி விரிவாக காணலாம்..

மார்பக புற்றுநோய் :

மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டும் ஏற்படும் பாதிப்பு என்று தான் நினைத்து வந்தனர். ஆனால், அமெரிக்காவின் புற்றுநோய் ஆய்வகத்தில், மார்பக புற்றுநோய் ஆண்களையும் பாதிக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் அதே அறிகுறிகள் தான் தென்படுவதாக கூறப்படுகிறது. வீக்கம், உறுத்தல், வலி, முலையில் மாற்றம் தென்படுதல் போன்றவை தான் அறிகுறிகளாக கூறப்படுகிறது. கொழுப்புச்சத்து குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) :

கால்சியம் சத்தின் குறைப்பாட்டினால் ஏற்படும் எலும்பு பலவீனமடைதல் மற்றும் உடையக்கூடியத் தன்மை தான் ஆஸ்டியோபோரோசிஸ். ஹார்வார்ட் மருத்துவ பள்ளியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில். உலக அளவில் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களை வெகுவாக பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு, காரணம் சரியான உடற்பயிற்சி செய்யாதது. எலும்புகளுக்கு வேலைதராமல் கணினியிலேயே வேலை செய்துக் கொண்டிருப்பது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

லூபஸ் (Lupus) :

லூபஸ் என்பது பல்வேறு காரணங்களால் சருமத்தில் ஏற்படும் ஒருவகையான கோளாறு ஆகும். இது பெரும்பாலும் 90% பெண்களை மட்டுமே பாதிக்கும் நோயாக கருதப்பட்டது. ஆனால், லூபஸ் அறக்கட்டளை எனும் மையம் நடத்திய ஆய்வில் இது ஆண்களுக்கும் ஏற்படும் பாதிப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.ஆண், பெண் இருவருக்கும் ஒரே வகையான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. மயக்கம், மூட்டு வலி, ஞாபக மறதி, சருமம் தடித்தல், அரிப்பு போன்றவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

பாப்பிலோமா (HPV – Human Papilloma Virus) :

பாப்பிலோமா என்பது ஒரு வகையான பால்வினை நோயாகும். இது பாதுகாப்பற்ற, தகாத உடலுறவுக் கொள்வதனால் தாக்கம் ஏற்பட்டு பரவும் நோய் ஆகும். இது, பொதுவாக பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கின்றது.பெண்களுக்கு HPV பரிசோதனை செய்து இந்த நோய் தாக்கத்தை கண்டறியலாம். ஆனால், ஆண்களுக்கு கண்டறிய எந்த பரிசோதனையும் இன்று வரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முடக்கு வாதம் :

இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகமாக ஆண்களை விட பெண்கள் தான் இந்த முடக்கு வாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். சமீபக்காலமாக இது ஆண்களுக்கு இடையேயும் பரவலாக அதிகரித்து வருகிறது. குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு உள்ள ஆண்களுக்கு முடக்கு வாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

-அனைவருக்கும் பகிருங்கள்