நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

இந்து திருமண சடங்கில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் முக்கியமான பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? என்பது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

ஆண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளலாம். ராகு, கேதுக்கள், புதன், சனி ஆகியவற்றின் ஆதிக்க நாட்களிலும் எண்கணித அடிப்படையில் திருமணத் தேதிகள் அமையுமேயானால் தம்பதியருக்குள் தகராறுகள் அதிகரிக்கும்.

தனவரவில் தடைகள் உருவாகும். நிம்மதி குறையும். நிகழவேண்டிய சுபகாரியம் தாமதப்படும். குழந்தைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும்.

இருமனம் இணையும் திருமணத்தால் பெருமைகள் வந்து சேரும். இல்லையேல் மறுமாங்கல்ய பூஜை மூலமே மன மகிழ்ச்சி அடைய முடியும்.

– அனைவருக்கும் பகிருங்கள்