தினமும் குளிக்கும் முன் 10 நிமிஷம் இத செஞ்சா, எவ்வளோ நன்மை கிடைக்கும் தெரியுமா?

குளியல் பிரஷ் உபயோகிப்பது என்பது மிகப் பழமையான அழகுப் பராமரிப்பு முறையாகும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையும் கூட. இந்த காலத்து அழகு பராமரிப்பு நிபுணர்களே இந்த முறையைப் பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இதன் அருமையை. இந்த முறையின் மூலம் உடலில் உள்ள அழுக்குகளை சுலபமாக அகற்றிவிடலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தினமும் குளிப்பதற்கு முன் 10 நிமிடம் குளியல் பிரஷ்ஷால் உடல் முழுவதும் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்னர் குளிக்க வேண்டும். இதனை தினமும் செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், நமது சருமத் தோற்றத்தில் உடனடி மாற்றத்தை வெளிக்காட்டும். பழமையான முறை என்றாலும், இந்த முறையை பலர் உபயோகிப்பதற்கு காரணம் இது ஒன்று மட்டுமே.

இப்போது குளியல் பிரஷ்ஷை உபயோகித்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்…

இறந்த செல்கள் நீங்கும் தினமும் குளிக்கும் முன் பிரஷ் கொண்டு உடலை மென்மையாக தேய்ப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.

இரத்த ஓட்டம் தூண்டப்படும் குளியல் பிரஷ் கொண்டு தினமும் சருமத்தை தேய்ப்பதன் மூலம், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் காட்சியளிக்கும்.

சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கும் சருமத் துளைகளில் அடைப்புகள் ஏற்பட்டால், அது அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் குளியல் பிரஷ் கொண்டு தினமும் குளிக்கும் முன் சருமத்தை தேய்ப்பத்தால், சருமத் துடைகளில் உள்ள அடைப்புகள் நீங்கும். ஆகவே தினமும் தவறாமல் இந்த செயலை செய்து நன்மைப் பெறுங்கள்.

செல்லுலைட்டுகள் குறையும் ஒருவர் தினமும் குளிக்கும் முன் சருமத்தை குளியல் பிரஷ் கொண்டு தேய்த்தால், அது சருமத்தில் செல்லுலைட் உருவாவதைத் தடுக்கும். உங்கள் சருமத்தில் செல்லுலைட் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறையாவது பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்துவிடுங்கள்.

சுத்தமான சருமம் சருமம் அழகாக காட்சியளிக்க வேண்டுமானால், அதற்கு சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவரது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், குளிக்கும் முன் பிரஷ் கொண்டு சருமத்தை தேய்க்க வேண்டும். இதனால் சருமம் சுத்தமாகி, அழுக்குகளின்றி ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கும்.

மென்மையான சருமம் குளியல் பிரஷ் கொண்டு குளிக்கும் முன் சருமத்தை தேய்க்கும் போது, சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும். ஆகவே சருமம் மென்மையாக இருக்க பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து குளியுங்கள்.

பருக்கள் தடுக்கப்படும் இறுதியாக குளிக்கும் முன் பிரஷ் கொண்டு உடலைத் தேய்ப்பதால், சருமத்தில் பருக்கள் வருவது தடுக்கப்படும்.எனவே இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ள இந்த முறையை தினமும் பின்பற்றி, எந்த ஒரு தீங்கும் இல்லாமல் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

-அனைவருக்கும் பகிருங்கள்