கால் ஆணியை காணாமல் போக்கும் பூண்டு எப்பிடின்னு தெரியுமா?

சிறியவர்கள் , பெரியவர்கள் என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும்,அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கு ஏற்ப்படுகிறது.

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் கால் ஆணியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதேபோன்று கால் ஆணி ஏற்பட்டால் இருக்கும். ஏதேனும் ஒரு பொருள் காலில் குத்தி கொண்டபோது அதை நீக்காமல் விடும்போது, தோல் படலம் வளர்ந்து கெட்டியாகி விடும்.

இதை தவிர்க்க மென்மையான காலணிகள் அணிய வேண்டும். காலணி இல்லாமல் வெளியில் செல்ல கூடாது. காலில் ஏதேனும் குத்தினால் உடனே அதை நீக்கி விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியம் வித்து அளவு எடுத்து அரைத்து தூங்கப்போவதற்கு முன்னாடி கால் ஆணி மேல் பூசி வந்தால் மூன்று நாளில் குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்தில் புண் உண்டாகும். அப்படி வந்தால்… ஒரு கரண்டி விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, புண் வந்த இடத்தில் பூசிவர புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.

கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். என்ன தான் தீர்வு? கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம்.

வேப்பிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்னை சரியாகும். குப்பைமேனி, வேப்பிலை ஆகியவை மருத்து குணங்களை கொண்டவை.

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும். 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைத்து, அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவியதும் குணம் கிடைத்திராது. தொடர்ந்து இண்டு வாரமாவது செய்து பாருங்கள். முதலில் வலி குறையும், போகப் போக ஆணியும் மறைந்து விடும். மருதாணி இலை சிறிது, மஞ்சல் துண்டு கொஞ்சம் இண்டையும் எடுத்து பட்டுப்போல் அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவில் தூங்குவதற்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டி விடுங்கள். தொடர்ந்து 10 நாட்கள் செய்து பாருங்கள் கால் ஆணி காணாமல் போகும்.

கொய்யா இலையை பயன்படுத்தி கால் ஆணிக்கான மருந்துவ தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன், கொய்யா இலை பசை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை கால் ஆணி மீது பூசிவர பிரச்னை சரியாகும்.

கொய்யா இலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கொய்யா இலையை தேனீராக்கி குடிப்பதால், இருமல் சளி போகும். இலையை அரைத்து பூசுவதால் தோல் நோய்கள் குணமாகும்.

இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

உள்ளங்கை, காலில் ஏற்படும் தோல் தடிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். புங்கன் எண்ணெய், விளக்கெண்ணெயை சம அளவு எடுத்து நன்றாக கலக்கவும். இதை உள்ளங்கை, கால்களில் தடிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும். தோல் மென்மையாக மாறும். வயிற்று உப்புசத்துக்கான மருத்துவத்தை பார்க்கலாம். 2 திருநீற்று பச்சை இலையை மென்று சாப்பிட வயிறு பொறுமல், உப்புசம் சரியாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்