விநாயகர், நாகர் சிலைகள் மரத்தடியில் இருப்பதன் ரகசியம் என்ன?

By | July 8, 2017

அரசமரம் மற்றும் வேப்பமரம் ஆகிய இரண்டு மரத்தின் அடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?

மரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்?

கோடை, மழை காலத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும்.

ஏனெனில் அது அந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் மற்றும் நாகர் கடவுள்களை அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது. இதற்கு இயற்கையானது கடவுள்களை வணங்குகிறது என்பது இதன் ரகசியமாக உள்ளது.

அதுவே பனிக்காலத்தில் மரத்தில் உள்ள இலைகளை உதிர்ந்து, வெறும் மரமாக காணப்படும். அந்நிலையை, சூரியன் தன் கதிர்களை செலுத்தி, விநாயகர் மற்றும் நாகர் கடவுளை வழிபடுவதாக கருதப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், வெயில் மற்றும் மழை காலத்தில் பெருமளவு பாதிக்கப்படும் மனிதர்கள், பனிக்காலத்தில் சீதோஷ்ண நிலையால் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, தெய்வங்கள் கருணையுடன் மரத்தடிகளை தங்களின் இருப்பிடமாக கொண்டுள்ளது என்று கருதுகின்றனர்.

– அனைவருக்கும் பகிருங்கள்