எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு உபயோகபடுத்த வேண்டும்?

ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது.

* எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். பிரச்சினை எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடைந்து வரும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர் களும், முடியை சுருட்டிவிட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.

* ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்சரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.

* எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் இவர் களுக்கு சிறந்தது.

* வறண்ட ஆரோக்கியமான கூந்தலைகொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தல் மென்மையாகத் திகழ உதவும்.

* முடியை முதலில் தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும்.

* ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும்.

* தலையின் ஒரு பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிக மாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.

* பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும்.

* ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும்.

* ஷாம்பு போட்டு கூந்தலை கழுவி, தலையை துவட்டிய பின்பு கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் மினு மினுப்பை கண்டிஷனர் தருகிறது.

* ஹேர் ஸ்பிரே மற்றும் ஜெல் பயன்படுத்துகிறவர்கள் எல்லா நாட்களும் ஷாம்பு பயன்படுத்தலாம்.

* சல்பேட் சேர்ந்த ஷாம்பு கூந்தலுக்கு அதிக வறட்சியை கொடுக்கும். அதனால் அதனை நேரடியாக பயன்படுத்தாமல் தண்ணீரில் கலந்து உபயோகியுங்கள்.

* பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.

* தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் ஆரோக் கியமாகிவிடாது. முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

-அனைவருக்கும் பகிருங்கள்