கரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால்

இன்னும் இரண்டு மாதங்களே உள்ள‍ன பொங்கல் பண்டிகை வருவதற்கு. இந்த பொங்கல் சமயத்தில்தான் கரும்பு என்று ஒன்றிருப்ப‍து நிறையபேருக்கு நினைவுக்கு வரும்.

சிலர் ஆங்காங்கே சாலையோரங்களில் எந்திரத்தின் உதவியுடன் விற்கப்படும் கரும்பு சாற்றினை வாங்கி குடித்து இருப்பார்கள். இந்த கரும்புசாறு குடிப்பதால் ஏற்படும் உண்டாகும் நன்மைகளில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்ப டுத்தும் மருத்துவப்பொருள் நிறைந்துள்ளதாக மருத்துவ நிபு ணர்கள் கருதுகிறார்கள். பொதுவாகமஞ்சள் காமாலை வந்தால், கண்கள் மட்டுமல்ல‍ சருமம் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப் பதே ஆகும். அது மட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல் பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலி ருந்து உடனே குணமாவதற்கு, 2 டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்