உங்கள் வீட்டு பணப்பெட்டியில் இதெல்லாம் இருக்கிறதா?

உங்கள் வீட்டில் பணம் வைத்துள்ள பணப்பெட்டியில் வைக்கவேண்டிய சில பொருட்கள்….

முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிறு, மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும்.

உங்களின் வீட்டுப் படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது. அப்படி இருப்பது மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும். அவ்வாறு இருந்தால் இரவில் மூடி வைத்து விடுவது நல்லது.

சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு, கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்துக் கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.

வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

கோயில் கொடிமரம், கோயில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. இது பல்வேறு வியாதிகளால் பாதிப்பு ஏற்பட்டு, தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:

வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்துச் செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

அனைவருக்கும் பகிருங்கள்!