மகாலட்சுமி யார் யாரிடம் தங்கமாட்டாள்?

 • 1. தன்னம்பிக்கையற்றவர்கள்
 • 2. கடமையைச் செய்யாதவர்கள்,
 • 3. குலதர்மம் தவறியவர்கள்,
 • 4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
 • 5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
 • 6. பொறாமை கொண்டவர்கள்,
 • 7. பேராசை கொண்டவர்கள்,
 • 8. கோபம் கொள்பவர்கள்,
 • 9. சான்றோரை மதிக்காதவர்கள்,
 • 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
 • 11. குரு நிந்தனை செய்பவர்கள்,
 • 12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
 • 13. இறைச்சி உண்பவர்கள்,
 • 14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
 • 15. பொய் பேசுபவர்கள்,
 • 16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
 • 17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
 • 18. மனத்துணிவு அற்றவர்கள்,
 • 19. அகத் தூய்மை அற்றவர்கள்,
 • 20. புறத்தூய்மை அற்றவர்கள்.
 • 21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
 • 22. ஆணவம் கொண்டவர்கள்,
 • 23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
 • 24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
 • 25. பகலில் உறங்குபவர்கள்,
 • 26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
 • 27. பசுக்களை வதை செய்பவர்கள்,
 • 28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
 • 29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
 • 30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
 • 31. நீரில் கோலம் போடுபவர்கள்,
 • 32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
 • 33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
 • 34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
 • 35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
 • 36. கல்வி கற்காதவர்கள்,
 • 37. கற்றவழி நிற்காதவர்கள்,
 • 38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
 • 39. விவேகம் இல்லாதவர்கள்,
 • 40. இரக்கம் அற்றவர்கள்.
 • 41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
 • 42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
 • 43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
 • 44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
 • 45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
 • 46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
 • 47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
 • 48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
 • 49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
 • 50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
 • 51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
 • 52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
 • 53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
 • 54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
 • 55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
 • 56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
 • 57. கோள் மூட்டுபவர்கள்,
 • 58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
 • 59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
 • 60. மது அருந்துபவர்கள்

இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள். இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்சயம் தவிர்க்க முடியும்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!