நெஞ்செரிச்சல்ல அவதிப்படுறீங்களா? இப்படி க்ரீன் டீ குடிச்சுப் பாருங்க!

க்ரீன் டீயை இயற்கையான முறையில் உட்கொள்வது மிகச் சிறந்தது. மேலும், இதில் சில இயற்கை உணவுப் பொருட்களை சேர்ப்பதால் இன்னும் ஆரோக்கியத்தைச் சேர்க்கும்.

நெஞ்செரிச்சல் என்பது இப்போது நிறைய பேரை பாதிக்கின்ற ஒரு சாதாரண நோயாக இருக்கின்றது. இதனை யாரும் பெரிது படுத்துவது இல்லை. ஆனால், இதனால் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது ஏற்படுவதற்கான காரணம், வயிற்றில் உருவாகக்கூடிய அதிகப்படியான அமிலம் மற்றும் அஜீரணக் கோளாறு தான்.

இதனால் நமக்கு ஏப்பம், இருமல்,வயிற்று உப்புசம் மற்றும் இன்னும் பிற வலிகளான மார்புக்கு கீழே உண்டாகக் கூடிய வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே, இந்த அமில மாற்றம் மற்றும் செஞ்செரிச்சல் உங்களை அசௌகரியமா உணரச் செய்யும்.

இந்த நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க க்ரீன் டீ குடிப்பது தான் ஒரே வழி. க்ரீன் டீயில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும், இது செரிமான சுழற்சிக்கு மிகவும் உதவுகிறது.

க்ரீன் டீயை இயற்கையான முறையில் உட்கொள்வது மிகச் சிறந்தது. மேலும், இதில் சில இயற்கை உணவுப் பொருட்களை சேர்ப்பதால் இன்னும் ஆரோக்கியத்தைச் சேர்க்கும்.

இப்பொழுது சில வகையான க்ரீன் டீயும் அதன் பயன்களும் பற்றி பார்ப்போம் வாருங்கள்…

இயற்கை க்ரீன் டீ :

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிபினைல்கள் அதிகமாக உள்ளது. இது நல்ல செரிமான செயலுக்கு உதவுகிறது. மேலும், இது அமிலத் தன்மையினால் செரிக்காத உணவை ஊணவுக்குழாய்க்கு திரும்ப வருவதைத் தடுக்கிறது.

எலுமிச்சையுடன் கூடிய க்ரீன் டீ :

இந்தக் கலவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலைப்படுத்துகிறது. எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இது செரிமான செயலை ஒழுங்குப்படுத்தும்.

தேன் கலந்த க்ரீன் டீ :

இந்தக் கலவையில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை சிறந்த செரிமான செயலுக்கு உதவும். இதுவே உண்மையாகவே அமில ரெஃப்லக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்தாகும்.

கற்றாழை கலந்த க்ரீன் டீ :

கற்றாழையில் கிளைகோல் புரதம் உள்ளது. இது வயிற்றில் ஏற்படும் வலி, உப்புசம் மற்றும் அமில ரெஃப்லக்ஸ் சரி செய்யும். இதை குடிப்பதால் செரிமான வேலை துரிதப்படுத்தப் படுகிறது.

க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் :

பாதாம் பால் அதிகப்படியான அமிலத் தன்மையை சமநிலை படுத்தும். மேலும் அமில உணவுகளை சீக்கிரம் சமன் செய்துவிடும். இது அமில ரெஃப்லக்ஸ் மற்றும் செஞ்செரிச்சலைக் குறைக்கிறது.

க்ரீன் டீ

எப்பொழுதும் இயற்கை க்ரீன் டீயையே உபயோகிங்கள். இல்லையென்றால் இது நெஞ்செரிச்சலை அதிகரித்துவிடும். சோடா, காபி போன்றவற்றை குடிப்பதை நிறுத்திவிட்டு ப்ளைன் க்ரீன் டீ குடிப்பதை பழகிக் கொள்ளுங்கள்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.