வாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்!

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைத்தண்டை ஜூஸ் செய்து வாரம் 2 முறைகள் என்று தொடர்ந்து குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைத்தண்டை இடித்து, சாறுப் பிழிந்து, அதனுடன் முள்ளங்கி சாறு சேர்த்து காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் 100 மில்லி அளவு குடித்து வந்தால் கல்லடைப்பு குணமாகும்.

தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால், நீர்க்கட்டி பிரச்சனையில் இருந்து ஒரு நல்ல தீர்வுக் காணலாம்.

ஒருநாள் வாழைத்தண்டு சாறு, மற்றொரு நாள் பார்லி காஞ்சி என்று சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

வாழைத்தண்டுடன் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவை சேர்த்து வாழைத்தண்டு சூப் செய்து, அதில் 200 மி.லி அளவு வாரத்தில் மூன்று நாள் குடித்து வந்தால், அது கொழுப்பைக் குறைத்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் நாட்கள் தள்ளி போதல், அதிகப்படியான ரத்தப் போக்கு போன்ற மாதவிடாய் கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வறட்டு இருமல் பிரச்சனையால் அவஸ்தைபடுபவர்கள், இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வாழைத்தண்டை காயவைத்து பொடியாக்கி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலையில் இருந்து விரைவில் குணமாகலாம்.

குறிப்பு

வாழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்