தீபத்தை இந்த திசையில் ஏற்றிவிடாதீர்கள் ஆபத்தாம்!

பூஜை அறையில் தீபம் ஏற்றி கடவுளை வணங்குகிறோம். ஆனால் அப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்

தீபம் ஏற்றும் போது, கிழக்குத் திசையில் ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன், மக்களிடையே நல்ல மதிப்பும் கிடைக்கும்.

மேற்குத் திசையில் தீபம் ஏற்றினால், சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விலகும்.

வடக்கு திசையில் நோக்கி தீபம் ஏற்றினால் சர்வ மங்களம் கிடைப்பதுடன், செல்வம் பெருகும்.
திரிகளின் வகைகள் மற்றும் அதன் பலன்கள்

பஞ்சுத் திரி – பஞ்சுத் திரியில் தீபம் ஏற்றினால், வாழ்க்கையின் சுபம் கூடும்.
தாமரைத்தண்டு திரி – தாமரைத் தண்டு திரியில் தீபம் ஏற்றினால், முன் பிறவியின் பாவங்கள் அகன்று, செல்வம் கிட்டும்.

வாழைத்தண்டு திரி – வாழத்தண்டு திரியில் தீபம் ஏற்றினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளெருக்கு பட்டை திரி – வெள்ளெருக்கு பட்டை திரியில் தீபம் ஏற்றினால், செய்வினைகள் நீங்கி, ஆயுள் நீடிக்கும்.

குறிப்பு

தென் திசையில் மட்டும் ஒருபோதும் தீபம் ஏற்றக் கூடாது. ஏனெனில் அதனால் எதிர்பாராத தொல்லைகளும், கடன்கள் மற்றும் பாவங்கள் ஏற்படும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.