இது நீங்க பிறந்த தேதியா? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்! சரியானு பாருங்க?

ஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தேதி : 1, 10, 19, 28

இந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவராகவும், சிறந்த தொழிலதிபராக இருக்கக் கூடியவர்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு தொழிலதிபர் குழுத்தலைவர் பதவி சிறப்பானதாக இருக்கும்.

தேதி : 2, 11, 20, 29

இந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் மற்றும் செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக, கச்சிதமாக செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு கலை, ஓவியம், நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்ற துறை சிறப்பாக இருக்கும்.

தேதி : 3, 12, 21, 30

இந்த நாட்களில் பிறந்தவர்கள் மனவலிமையாக இருப்பதால், நிதி துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு வங்கி, நிதி சம்பந்தமான துறைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

தேதி : 4, 13, 22, 31

இந்த நாட்களில் பிறந்தவர்கள் அபாயம் நிறைந்த வேலைகளில் ஈடுபட விரும்புவதால், அடிக்கடி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை மற்றும் நடிப்பு துறை மிகவும் சிறப்பாக இருக்கும்.

தேதி : 5, 14, 23

இந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் சரியான முடிவெடுக்கும் சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.

தேதி : 6, 15, 24

இந்த நாட்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் திரைப்படத்துறை, ஹோட்டல் அல்லது விருந்தோம்பல், வணிகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டால், பெயரும் புகழும் சிறப்பாக இருக்கும்.

தேதி : 7, 16, 25

இந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை திறன் அதிகமாக கொண்டிருப்பதால், ஆராய்ச்சி துறையில் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.

எனவே இவர்கள் ஆய்வு சம்பந்தமான துறை அல்லது தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டும் படியான துறை பொருத்தமானதாக இருக்கும்.

தேதி : 8, 17, 26

இந்த நாட்களில் பிறந்தவர்கள், தனது 35 வயது வரை பல போராட்டங்களை சந்திப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் மற்றும் கடுமையாக வேலை செய்யக் கூடியவர்கள்.

எனவே இவர்களுக்கு அரசியல், ஆசிரியர் அல்லது சொந்த தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.

தேதி : 9, 18, 27

இந்த நாட்களில் பிறந்தவர்கள் விளையாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு விளையாட்டு, பாதுகாப்பு படைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணங்கள் என்ன தெரியுமா?