மருந்துகள் போன்று வேலை செய்யும் 10 சமையலறை பொருட்கள்!

சமயலறை என்பது ருசியான உணவுகளை தயாரிக்க நம் அனைவரின் வீட்டில் உள்ள முக்கியமான இடமாகும். சமைப்பதற்கு தேவையான பல பொருட்களும் இங்கே தான் இருக்கும். இவையாவும் சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறதா என்றால் இல்லை என பலரும் கூறுவீர்கள். ஆம், சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல பொருட்களும் மருந்துகளாகவும் பயன்படுகிறது. இது பலருக்கு தெரிந்திருந்தாலும் எந்த பொருட்கள் எப்படி மருந்தாக செயல்படுகிறது என்ற முழுமையான விவரங்கள் பல பேருக்கு தெரிவதில்லை. ஆனால் அவைகளின் மருத்துவ குணங்கள் தெரிந்து அதனை பயன்படுத்துபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இவ்வகையான இயற்கையான பொருட்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதால், அவைகளை அதற்காக பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆம், சமையலுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களும் பல உடல் நல நன்மைகளை அளித்து வருகிறது. உலகத்திலேயே மிகச்சிறந்த மருந்து, உணவு தான் என சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? உணவுகளை ருசி மிக்கதாக ஆக்குவது தவிர, சிறிய உடல்நல பிரச்சனைகளில் இருந்து பெரிய அளவிலான உடல்நல பிரச்சனைகள் வரை சரிசெய்ய இவை பயன்படுகிறது. வீட்டு சிகிச்சையால் பணமும் நேரமும் மிச்சமாகும் தானே! அதை விட முக்கியம், இவையாவும் சிறந்த மருந்துகளாக செயல்படும்!

சரி, மருந்துகளாக வேலை செய்யும் 10 சமையலறை பொருட்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

மஞ்சள்

மஞ்சள் என்பது சமயலுக்கு பயன்படுத்தப்படும் மிக பிரபலமான மசாலா. அதன் கிருமி நாசினி, நுண்ணுயிர் எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குணங்கள் அதனை பல்வேறு பிரச்சனைகளுக்கான சிறந்த வீட்டு சிகிச்சையாக மாற்றியுள்ளது.

சிறிய வெட்டுக்காயங்கள் முதல் தீப்புண்கள் வரை மஞ்சளை கொண்டு சிகிச்சையளிக்கலாம். மேலும் பொதுவாக ஏற்படும் சளி, இருமல், மூட்டு அழற்சி, கீல்வாதம், சரும வெட்டுக்கள், பருக்கள் மற்றும் பல்வேறு வயிற்று நோய்களையும் குணப்படுத்தும். மூளைத் தேய்வு நோயை தடுத்து, மதுபானம் அல்லது வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதால் ஏற்படும் ஈரல் பாதிப்பை குறைக்கும். அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணத்தால் பல வகையான புற்றுநோய்களுக்கு, குறிப்பாக மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் லுகீமியா ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இது பயன்படுகிறது.

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பி, வலிப்பு குறைவு, பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி, நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்கள் உள்ளது. அதே நேரம், இது ஒரு சக்தி வாய்ந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும் இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஏ, சி, ஈ, பி-காம்ப்ளக்ஸ் வளமையாக நிறைந்துள்ளது.

வயிற்று வலி, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்க இஞ்சியை பயன்படுத்தலாம். இதுப்போக தொடர்ச்சியான உடல் வலி, கீல்வாத வலி, சளி, இருமல், பிற சுவாச கோளாறு பிரச்சனைகள், காய்ச்சல், மாதவிடாய் வலிகள் ஆகியவைகளையும் குணப்படுத்தும். புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் தன்மையை கொண்டுள்ளதால், பல்வேறு புற்றுநோய் வகைகளை கட்டுப்படுத்தவும் இதை பயன்படுத்தலாம்.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பி, இரைப்பைக் குடல் வலி நீக்கி மற்றும் பெருங்குடல் காற்று நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. இந்த மசாலாவில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், இரும்பு, ஜிங்க், செம்பு போன்ற கனிமங்களும் வளமையாக உள்ளது. இது போக வைட்டமின் ஏ, நியாசின் மற்றும் பைரிடாக்சின் ஆகியவைகளும் வளமையாக உள்ளது. சளி, வாய்வு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு, கீல்வாத வலி மற்றும் மாதவிடாய் வலிகளை குணப்படுத்த லவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது.

லவங்கப்பட்டையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் வைத்திட உதவும். கூடுதலாக, கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கவும் பல்வேறு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கவும் கூட இது உதவுகிறது. இருப்பினும் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அது நச்சுத்தன்மையை உண்டாக்கி விடும்.

பூண்டு

வியர்வையாக்கி, சிறுநீர்ப் பிரிப்பு, சளி நீக்கி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, நச்சுயிரி எதிர்ப்பி மற்றும் கிருமிநாசினி குணங்களை பூண்டு கொண்டுள்ளது. கூடுதலாக, பூண்டில் வைட்டமின்களும் புரதம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க் போன்ற பல கனிமங்களும் அடங்கியுள்ளது.

இருமல், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, தொண்டை புண், கரகரப்பு, சைனஸ் பிரச்சனைகள், ஆஸ்துமா, காது தொற்றுக்கள், செரிமானமின்மை, வயிற்று வலி, வயிற்றுவலி, படர்தாமரை, பல் வலி மற்றும் பூச்சிக் கடிகளுக்கு சிகிச்சை அளிக்க பூண்டை பயன்படுத்தலாம். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் வாதங்களை தடுக்கவும் இது உதவிடும். மேலும் அடர்த்தியான வாசனையை கொண்ட இந்த மூலிகை பல்வேறு புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடுகளையும் குறைக்கிறது.

எலுமிச்சை

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குணங்களுக்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறனுக்காகவும் நன்கு அறியப்படுபவை தான் எலுமிச்சை. இதில் புத்துணர்வை அளிக்கும் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் உள்ளது. எலுமிச்சையில் பெருமளவிலான மருத்துவ பயன்கள் உள்ளது. தலை வலி, தொண்டை தொற்றுக்கள், செரிமானமின்மை, மலச்சிக்கல், வாய்வு பிரச்சனைகள், பொடுகு, பூச்சிக்கடிகள், கீல்வாதம், வாத நோய் மற்றும் உட்புற இரத்த கசிவு ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடையை குறைக்க, இரத்த கொதிப்பை குறைக்க, சிறுநீரக கற்களை நீக்கவும் இது உதவுகிறது. தொடர்ச்சியாக இதனை உட்கொண்டால் வாதம், இதய குழலிய நோய்கள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களால் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூட இது மிகவும் நல்லதாகும்.

தேன்

தேனில் நச்சுயிரி எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பி குணங்கள் உள்ளது. மேலும் பல முக்கிய வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், சோடியம், செம்பு, இரும்பு, மாங்கனீஸ், சல்ஃபர், ஜிங்க், பாஸ்ஃபேட் போன்ற கனிமங்களும் இதில் வளமையாக உள்ளது.

இருமல், தொண்டை எரிச்சல், குரல்வளை அழற்சி, அரிக்கும் தோலழற்சி, குமட்டல் மற்றும் வயிற்று அல்சர் சிகிச்சைகளுக்கு இதனை பயன்படுத்தலாம். மேலும் சரும தொற்றுக்கள் மற்றும் இரிய அளவிலான காயங்கள் மற்றும் தீப்புண்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இது உதவும். கூடுதலாக, கார்போஹைட்ரேட்ஸ் இதில் இயற்கையாகவே வளமையாக உள்ளது. இது விளையாட்டு வீரர்களின் ஆற்றுகையை உடனடியாக ஊக்குவிக்கும். மேலும் தசை சோர்வையும் குறைக்கும். ஆண்மையின்மை மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்கவும் பச்சை தேன் உதவுகிறது.

வெங்காயம்

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பி, கிருமிநாசினி, ஆன்டி-பயாடிக், நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின்கள் சி, பி1, பி6 மற்றும் கே, பையோடின், குரோமியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் உண்ணக்கூடிய நார்ச்சத்து வளமையாக உள்ளது.

சளி, இருமல், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, சளிக்காய்ச்சல் மற்றும் ஆஸ்துமாக்களுக்கு வெங்காயம் சிறப்பாக சிகிச்சையளிக்கும். மேலும் வயிற்று தொற்று, குமட்டல் மற்றும் வயிற்று போக்குகளை எதிர்த்து சிறப்பாக செயல்படும்.வெங்காயத்தில் உள்ள பல வகையான புற்று எதிர்ப்பி ஆற்றல்கள், பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் இடர்பாடுகளை குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

மேலும் வெங்காயத்தில் குரோமியம் உள்ளது. இது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். வெங்காயத்தை பச்சையாக உட்கொண்டால் கொலஸ்ட்ராலும் குறையும். சுவாரசியமாக, வெங்காய ஜூஸை வழுக்கை தலையில் தடவினால் முடி கொட்டுதல் குறையும்.

கராம்பு

கராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பி, இரைப்பைக் குடல் வலி நீக்கி மற்றும் பெருங்குடல் காற்றுநீக்கி குணங்கள் உள்ளது. இதில் பலவிதமான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. பல்வலி, வாய் அல்சர், ஈறு புண்கள், மூட்டு அழற்சி, தசை வலிகள், உடல் வலி, செரிமானமின்மை, குமட்டல், வாந்தி, வாய்வு பிரச்சனை மற்றும் காலரா போன்ற பல்வேறு உடல்நல நிலைகளை எதிர்த்து கிராம்பு போராடும்.

சளி, இருமல், சைனஸ், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காசநோய் போன்ற பல வித சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பு எண்ணெய்யை மூச்சுவழி மருந்து ஊட்டலாக பயன்படுத்தலாம்.

ஏலக்காய்

வாசனை மிக்க இந்த மசாலாவை “மசாலாக்களின் ராணி” என்றும் அழைக்கின்றனர். பெருங்குடல் காற்றுநீக்கி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கிருமிநாசினி, வலிப்பு குறைவு, சிறுநீர்ப் பிரிப்பு மற்றும் சளி நீக்கி குணங்கள் இதில் அடங்கியுள்ளது. மேலும் பொட்டாசியம், கால்சியம், செம்பு, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பல கனிமங்களும் இதில் வளமையாக உள்ளது.

சுவாச துர்நாற்றம் மற்றும் வாய் அல்சருக்கும் ஏலக்காயை பயன்படுத்தலாம். கூடுதலாக, அதன் பெருங்குடல் காற்றுநீக்கி குணத்தால் செரிமானமின்மை, குமட்டல், நெஞ்செரிச்சல், வாய்வு மற்றும் வயிற்று வலி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, பல்வேறு சுவாச அலர்ஜிகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மசாலா நல்லதாகும். மேலும் பசியை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, தசை டென்ஷனை சுலபமாக்கவும் ஏலக்காய் உதவும்.

சீரகம்

சீரகத்தில் அழற்சி நீக்கி, பெருங்குடல் காற்றுநீக்கி, வாய்வு நீக்கி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குணங்கள் அடங்கியுள்ளது. இதில் இரும்பு, செம்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், செலீனியம் மற்றும் ஜிங்க் போன்ற பல கனிமங்களும், டயட்டரி நார்ச்சத்தும் வளமையாக உள்ளது.

செரிமானமின்மை, வாய்வு, வயிற்று போக்கு, அசிடிட்டி, வயிற்று வலி, குமட்டல், சிறுநீரக வலி, சளி, இருமல், காய்ச்சல், தொண்டை புண் மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க சீரகம் உதவும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிடவும் உதவும். கர்ப்பமான பெண்களின் வயிற்றில் சிசுவின் வளர்ச்சிக்கும் இது ஆதரவாக விளங்கும். மேலும் மார்பக மற்றும் பெருங்குடல் புற்று அணுக்கள் வளர்ச்சியை இது மெதுவாக்கும்.

இந்த சமயலறை பொருட்களின் பயன்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்தும், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவிடும். இவைகளை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்லதொரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்திடலாம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்