நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், இச்செயல்களை மாலையில் செய்யாதீர்கள்!

அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ நமது சாஸ்திரங்கள் சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றன. நம் ஒவ்வொருவருக்குமே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அந்த ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் செய்யும் சில தவறுகளையும் தவிர்க்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருக்க விரும்பினால், மாலை வேளையில் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது செய்யக்கூடாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வாருங்கள்.

உணவு உண்பது

மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போது உணவை உண்பது ஆரோக்கியமானது அல்ல. இது வயிற்று உபாதைகளை உண்டாக்கும். சாஸ்திரத்தின் படி, இது வீட்டில் செலவுகளை அதிகரிக்குமாம். இருப்பினும், மாலையில் தாங்க முடியாத அளவில் பசி என்றால், பழங்கள் அல்லது பழச்சாறுகளை உட்கொள்ளுங்கள்.

சுத்தப்படுத்துதல்

சூரிய அஸ்தமனத்தின் போது, வீட்டை சுத்தம் செய்யும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். லட்சுமி தேவி நம் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டுமானால், மாலை வேளையில் கடவுளை பூஜித்து வணங்குங்கள்.

உடலுறவு

மாலை வேளையில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாஸ்திரத்தின் படி, தேவலோகத்தில் உள்ள லட்சுமி தேவி மாலையில் பூமியை நோக்கி வருவதால், இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால், லட்சுமி தேவி உங்கள் வீட்டு பக்கமே வரமாட்டாள். மேலும் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால், வீட்டில் பணப் பிரச்சனை அதிகரிக்கும்.

தூக்கம்

மாலை வேளையில் தூங்குவது அறவே செய்யக்கூடாத செயல்களுள் ஒன்று. ஏனெனில் இது மனநிலையை மந்தப்படுத்தி, நினைவுத் திறனை பலவீனமாக்கி, வயிற்றுப் பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும்.

இலைகளைப் பறிப்பது

மாலை வேளையில் செடியில் இருந்து இலைகளைப் பறித்தால், அது வீட்டில் வறுமையை வரவழைக்கும். குறிப்பாக துளசி செடியில் இச்செயலை செய்தால், குடும்ப சூழ்நிலை மோசமாகும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்