ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய !

ஜாதகத்தில் சந்திர பகவான் சுபஸ்தானங்களாகிய (1,2,4,5,7,8,9,10.11) பலமிழந்தால், அவரது தசா புக்தி அந்தரக்காலங்களில் அசுப பலன்களைத் தருவார். அந்த அசுப பலன்கள் குறைய கீழ்வரும் மந்திரத்தை அனுதினம் ஸ்நானம் முடித்து, பூஜை அறையில் விநாயகப்பெருமானை த்யானஞ் செய்து பின்,

சுபமந்திரம்

ஓம் பிறைமதி குபேரா !

பித்தனின் சடையில் பிறந்தெழுந்தாய் !

இந்துவே சோகா இமகரா !

அம்புலி இராக்கதிர் வியோபா !

நிலவுஞ்சதிரா சுடர்கலையோனே சுதனே !

மனக்கவலை அகல சீக்கிரம் பளிங்கென வருவாய் !

ஓம் வசிவசி வசிவசி சுவாஹ

என்று இம்மந்திரத்தை மானதமாக உச்சாிக்க வேண்டும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்