மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்!

ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் காரணமாக சீரற்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் போது, மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் என்ன?

அன்றாடம் கொழுப்பு மற்றும் பால் நிறைந்த உணவு வகைகள் மற்றும் பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு அலுமினியம், கால்சியம் கலந்துள்ள ஆன்டாசிட் மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவை கூட மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், வாந்தி, பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போதும், வெயிலில் அதிகம் அலையும் போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுவதால், மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் எந்த நோயின் அறிகுறி?

மூலநோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகளுக்கான முக்கிய அறிகுறி தான் மலச்சிக்கல்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அன்றாடம் நார்ச்சத்து நிறந்த உணவு வகைகள் சாப்பிட வேண்டும், அதிகமான தண்ணீர் குடிப்பதுடன், காய்கறி, கீரை, பழங்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்சனையின் பக்கவிளைவுகள் என்ன?

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். இதனால் அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்